Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டில் 2வது தங்கம் வென்றது இந்தியா.. துப்பாக்கி சுடுதலில் சுருச்சி, கமல்ஜீத் ஜோடி அசத்தல்

நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதல் களத்தில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழுப் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் சுருச்சி சிங் மற்றும் கமல்ஜீத் ஜோடி புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில், இந்திய ஜோடி தொடக்கம் முதலே இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி ஆதிக்கம் செலுத்தியது. முதல் சுற்றிலேயே 103 புள்ளிகளைக் குவித்து முன்னிலை பெற்றது. தென் கொரிய வீரர்கள் கடும் சவால் கொடுத்த போதிலும், இந்திய ஜோடி சற்றும் பதற்றமின்றி அபாரமாக சுட்டு முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டது.

Asian Games 2026 India Wins Gold in 10m Air Pistol Mixed Team Event with Asian Record


இறுதியில், இந்திய அணி மொத்தம் 484.6 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. தென் கொரிய அணி 478 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஈரான் அணி 415.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. தென் கொரியாவை விட 6.6 புள்ளிகள் வித்தியாசத்தில் அசுர முன்னிலை பெற்று இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

தனிநபர் பிரிவுகளில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்குப் பிறகு, கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்கிய சுருச்சி மற்றும் கமல்ஜீத் கூட்டணி மிகச் சிறந்த முறையில் மீண்டு வந்து தங்கத்தை வசப்படுத்தியுள்ளது.

கங்காரு படையை சுருட்டிய தென்னாப்பிரிக்கா.. பிரீட்ஸ்கே சதம், கேசவ் மகராஜ் சுழலில் வீழ்ந்த ஆஸ்திரேலியா

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும். புதிய ஆசிய சாதனையுடன் இந்திய வீரர்கள் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Friday, September 25, 2026, 9:13 [IST]
Other articles published on Sep 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+