இந்தியாவுக்கு 30 தங்கம் உட்பட 114 பதக்கங்கள்.. ஆசிய பாரா போட்டியில் பதக்கம் வென்றவர்கள் பட்டியல்
நகோயா: ஜப்பான் நாட்டின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்திய மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள் தங்களது வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் 114 பதக்கங்களை அள்ளிப் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளனர். இதில் 30 தங்கம், 35 வெள்ளி மற்றும் 49 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
இதற்கு முன்பு கடந்த 2023 ஹாங்சோ ஆசிய பாரா போட்டியில் இந்தியா 111 பதக்கங்களை (29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம்) வென்றதே சாதனையாக இருந்தது. அந்த இமாலய சாதனையை தற்போது நகோயாவில் இந்திய வீரர்கள் தகர்த்தெறிந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளனர். ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்து ஆசிய அரங்கில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளது. குறிப்பாக தென் கொரியாவை விட அதிக பதக்கங்களை வென்றது கவனத்தை ஈர்த்துள்ளது.

துப்பாக்கிச் சுடுதலில் மோனா அகர்வால் மற்றும் அவனி லேகரா முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கினர். பாரா தடகளப் போட்டிகளில் மட்டுமே இந்தியா 22 தங்கம் உள்பட மொத்தம் 65 பதக்கங்களை வாரிக் குவித்தது. பாரா பேட்மிண்டனில் 16 பதக்கங்கள் கிடைத்தன.
விளையாட்டு வாரியாக இந்தியா வென்ற பதக்கங்கள் விவரம்:
- பாரா தடகளம்: 22 தங்கம், 19 வெள்ளி, 24 வெண்கலம் (மொத்தம் 65)
- பாரா பேட்மிண்டன்: 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் (மொத்தம் 16)
- பாரா நீச்சல்: 0 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் (மொத்தம் 11)
- பாரா டேபிள் டென்னிஸ்: 0 தங்கம், 0 வெள்ளி, 7 வெண்கலம் (மொத்தம் 7)
- பாரா வில்வித்தை: 3 தங்கம், 3 வெள்ளி, 0 வெண்கலம் (மொத்தம் 6)
- பாரா துப்பாக்கிச் சுடுதல்: 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் (மொத்தம் 5)
- பாரா ஜூடோ: 0 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் (மொத்தம் 2)
- பாரா பவர்லிஃப்டிங்: 0 தங்கம், 2 வெள்ளி, 0 வெண்கலம் (மொத்தம் 2)
- ஒட்டுமொத்த பதக்கங்கள்: 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் (மொத்தம் 114)
ஆசிய பாரா போட்டிகள் 2026: முதல் 6 நாடுகளின் பதக்கப் பட்டியல்
- சீனா: 204 தங்கம், 115 வெள்ளி, 108 வெண்கலம் (மொத்தம் 427)
- ஜப்பான்: 64 தங்கம், 60 வெள்ளி, 62 வெண்கலம் (மொத்தம் 186)
- உஸ்பெகிஸ்தான்: 45 தங்கம், 49 வெள்ளி, 51 வெண்கலம் (மொத்தம் 145)
- இந்தியா: 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் (மொத்தம் 114)
- தென் கொரியா: 28 தங்கம், 36 வெள்ளி, 33 வெண்கலம் (மொத்தம் 97)
- ஈரான்: 26 தங்கம், 36 வெள்ளி, 40 வெண்கலம் (மொத்தம் 102)
114 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களின் முழு பட்டியல் (தங்கம், வெள்ளி, வெண்கலம் என்ற வரிசைப்படி):
தங்கப் பதக்கங்கள் (30):
- மோனா அகர்வால் - பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்எச்1 (பாரா துப்பாக்கிச் சுடுதல்)
- நிஷாத் குமார் - ஆடவர் நீளம் தாண்டுதல் டி47 (பாரா தடகளம்)
- சௌமியா - பெண்கள் 1500 மீட்டர் டி12/டி13 (பாரா தடகளம்)
- ரிங்கு - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்46 (பாரா தடகளம்)
- தீப்தி ஜீவன்ஜி - பெண்கள் 400 மீட்டர் டி20 (பாரா தடகளம்)
- பிரணவ் சூர்மா - ஆடவர் வட்டெறிதல் எஃப்51/எஃப்52/எஃப்53 (பாரா தடகளம்)
- தேவேந்தர் குமார் - ஆடவர் வட்டெறிதல் எஃப்43/எஃப்44/எஃப்62/எஃப்64 (பாரா தடகளம்)
- நிஷாத் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி47 (பாரா தடகளம்)
- சிம்ரன் - பெண்கள் 200 மீட்டர் டி12 (பாரா தடகளம்)
- பிரவீன் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 (பாரா தடகளம்)
- சச்சின் சர்ஜேராவ் கிலாரி - ஆடவர் குண்டு எறிதல் எஃப்46 (பாரா தடகளம்)
- ஆயுஷ் வர்மா - ஆடவர் குண்டு எறிதல் எஃப்53 (பாரா தடகளம்)
- திலீப் மஹாது கவித் - ஆடவர் 100 மீட்டர் டி47 (பாரா தடகளம்)
- சிம்ரன் - பெண்கள் 100 மீட்டர் டி12 (பாரா தடகளம்)
- சீத்தல் தேவி மற்றும் தோமன் குமார் - காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் (பாரா வில்வித்தை)
- சுவர்ணா ராஜ் - பெண்கள் வட்டெறிதல் எஃப்54 (பாரா தடகளம்)
- சீத்தல் தேவி - பெண்கள் காம்பவுண்ட் தனிநபர் (பாரா வில்வித்தை)
- அஞ்சனாபென் பம்பாடியா - பெண்கள் 400 மீட்டர் டி47 (பாரா தடகளம்)
- சைலேஷ் குமார் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (பாரா தடகளம்)
- திலீப் மஹாது கவித் - ஆடவர் 400 மீட்டர் டி47 (பாரா தடகளம்)
- சோலைராஜ் தர்மராஜ் - ஆடவர் நீளம் தாண்டுதல் டி44/டி62/டி64 (பாரா தடகளம்)
- ஹர்விந்தர் சிங் மற்றும் விஜய் சுந்தி - ஆடவர் ரீகர்வ் இரட்டையர் (பாரா வில்வித்தை)
- நிதேஷ் குமார் - ஆடவர் ஒற்றையர் எஸ்எல்3 (பாரா பேட்மிண்டன்)
- நவீன் சிவகுமார் - ஆடவர் ஒற்றையர் எஸ்எல்4 (பாரா பேட்மிண்டன்)
- சந்தீப் குமார் - ஆடவர் 400 மீட்டர் டி64 (பாரா தடகளம்)
- ஹனி - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்37/38 (பாரா தடகளம்)
- மோனா அகர்வால் - பெண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் (பாரா துப்பாக்கிச் சுடுதல்)
- மானசி ஜோஷி மற்றும் துளசிமதி முருகேசன் - பெண்கள் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 (பாரா பேட்மிண்டன்)
- சுமித் அன்டில் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்42-எஃப்44/எஃப்61-எஃப்64 (பாரா தடகளம்)
- பிரணவ் சூர்மா - ஆடவர் கிளப் த்ரோ எஃப்51 (பாரா தடகளம்)
வெள்ளிப் பதக்கங்கள் (35):
- அவனி லேகரா - பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்எச்1 (பாரா துப்பாக்கிச் சுடுதல்)
- கோகிலா - பெண்கள் ஜே2 -52 கிலோ (பாரா ஜூடோ)
- ரவி கார்த்திக் புதிகினா - ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்13 (பாரா நீச்சல்)
- ராதா வெங்கடேஷ் - பெண்கள் 1500 மீட்டர் டி12/டி13 (பாரா தடகளம்)
- அஜித் சிங் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்46 (பாரா தடகளம்)
- பிரதீப் குமார் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்53/எஃப்54 (பாரா தடகளம்)
- அசோக் - ஆடவர் -65 கிலோ (பாரா பவர்லிஃப்டிங்)
- மனிஷ் நர்வால் - ஆடவர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (பாரா துப்பாக்கிச் சுடுதல்)
- ராம் ரத்தன் சிங் - ஆடவர் வட்டெறிதல் எஃப்51/எஃப்52/எஃப்53 (பாரா தடகளம்)
- ராகேஷ் - ஆடவர் வட்டெறிதல் எஃப்43/எஃப்44/எஃப்62/எஃப்64 (பாரா தடகளம்)
- பிரீத்தி பால் - பெண்கள் 200 மீட்டர் டி35 (பாரா தடகளம்)
- பண்டி - ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 (பாரா தடகளம்)
- மன்ஜீத் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்12/எஃப்13 (பாரா தடகளம்)
- முகமது யாசர் - ஆடவர் குண்டு எறிதல் எஃப்46 (பாரா தடகளம்)
- பாக்யஸ்ரீ ஜாதவ் - பெண்கள் குண்டு எறிதல் எஃப்34 (பாரா தடகளம்)
- சீத்தல் தேவி மற்றும் பாயல் நாக் - பெண்கள் காம்பவுண்ட் இரட்டையர் (பாரா வில்வித்தை)
- கஸ்தூரி ராஜாமணி - பெண்கள் -67 கிலோ (பாரா பவர்லிஃப்டிங்)
- முகமது மோர்சிங்கனகாத் - ஆடவர் 100 மீட்டர் டி47 (பாரா தடகளம்)
- அகிரா பனோத்து - ஆடவர் 400 மீட்டர் டி35/டி38 (பாரா தடகளம்)
- பிரீத்தி பால் - பெண்கள் 100 மீட்டர் டி35 (பாரா தடகளம்)
- சுவாதி சவுத்ரி - டபிள்யூ1 பெண்கள் (பாரா வில்வித்தை)
- தேஜல்பேன் தாமோர் - பெண்கள் 400 மீட்டர் டி12 (பாரா தடகளம்)
- ஜெயந்தி பெஹரா - பெண்கள் 400 மீட்டர் டி47 (பாரா தடகளம்)
- கபில் குமார் - ஆடவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்10 (பாரா நீச்சல்)
- வருண் சிங் பாட்டி - ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (பாரா தடகளம்)
- ரவி கார்த்திக் புதிகினா - ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் எஸ்13 (பாரா நீச்சல்)
- பாவ்னா சவுத்ரி மற்றும் பூஜா ஜாத்யான் - பெண்கள் ரீகர்வ் இரட்டையர் (பாரா வில்வித்தை)
- பிரமோத் பகத் - ஆடவர் ஒற்றையர் எஸ்எல்3 (பாரா பேட்மிண்டன்)
- துளசிமதி முருகேசன் - பெண்கள் ஒற்றையர் எஸ்யு5 (பாரா பேட்மிண்டன்)
- நித்யா ஸ்ரீ சுமதி சிவன் - பெண்கள் ஒற்றையர் எஸ்எச்6 (பாரா பேட்மிண்டன்)
- நிமிஷா சக்குங்கல் பரம்பில் - பெண்கள் நீளம் தாண்டுதல் டி47 (பாரா தடகளம்)
- பிரமோத் - ஆடவர் 1500 மீட்டர் டி46 (பாரா தடகளம்)
- கிருஷ்ணா நகர் மற்றும் சிவராஜன் சோலைமலை - ஆடவர் இரட்டையர் எஸ்எச்6 (பாரா பேட்மிண்டன்)
- நிதேஷ் குமார் மற்றும் துளசிமதி முருகேசன் - கலப்பு இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 (பாரா பேட்மிண்டன்)
- மகேந்திர குர்ஜார் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்42-எஃப்44/எஃப்61-எஃப்64 (பாரா தடகளம்)
வெண்கலப் பதக்கங்கள் (49):
- கபில் பர்மர் - ஆடவர் ஜே1 -70 கிலோ (பாரா ஜூடோ)
- ரவன்னி வலசனைனி - பெண்கள் 1500 மீட்டர் டி11 (பாரா தடகளம்)
- ஆயுஷ் வர்மா - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்53/எஃப்54 (பாரா தடகளம்)
- பிரவீன் சர்மா - ஆடவர் குண்டு எறிதல் எஃப்11 (பாரா தடகளம்)
- ஜெஹான் மதன் - ஆடவர் ஒற்றையர் கிளாஸ் 1 (பாரா டேபிள் டென்னிஸ்)
- சோனல்பேன் படேல் - பெண்கள் ஒற்றையர் கிளாஸ் 3 (பாரா டேபிள் டென்னிஸ்)
- பவினா படேல் - பெண்கள் ஒற்றையர் கிளாஸ் 4-5 (பாரா டேபிள் டென்னிஸ்)
- பிராச்சி பாண்டே - பெண்கள் ஒற்றையர் கிளாஸ் 6 (பாரா டேபிள் டென்னிஸ்)
- பேபி சகானா ரவி - பெண்கள் ஒற்றையர் கிளாஸ் 9 (பாரா டேபிள் டென்னிஸ்)
- சிருஷ்டி அரோரா - பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (பாரா துப்பாக்கிச் சுடுதல்)
- ஹிமான்ஷு நந்தல் - ஆடவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்11 (பாரா நீச்சல்)
- நிரஞ்சன் முகுந்தன் - ஆடவர் 200 மீட்டர் தனிநபர் மெட்லே எஸ்எம்7 (பாரா நீச்சல்)
- பிரதீப் குமார் - ஆடவர் வட்டெறிதல் எஃப்43/எஃப்44/எஃப்62/எஃப்64 (பாரா தடகளம்)
- தேஜல்பேன் தாமோர் - பெண்கள் 200 மீட்டர் டி12 (பாரா தடகளம்)
- ஹோகாடோ ஹோடோஷே செமா - ஆடவர் குண்டு எறிதல் எஃப்56/எஃப்57 (பாரா தடகளம்)
- அனுபவ் சவுத்ரி - ஆடவர் 100 மீட்டர் டி35 (பாரா தடகளம்)
- ராகேஷ்பாய் பட் - ஆடவர் 100 மீட்டர் டி37 (பாரா தடகளம்)
- பர்வீன் - ஆடவர் குண்டு எறிதல் எஃப்46 (பாரா தடகளம்)
- பிரணவ் தேசாய் - ஆடவர் 100 மீட்டர் டி64 (பாரா தடகளம்)
- சுக்ச்சைன் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்55 (பாரா தடகளம்)
- ரவி ரொங்காலி - ஆடவர் குண்டு எறிதல் எஃப்40 (பாரா தடகளம்)
- கரம்ஜோதி - பெண்கள் வட்டெறிதல் எஃப்55 (பாரா தடகளம்)
- ரவி கார்த்திக் புதிகினா - ஆடவர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்13 (பாரா நீச்சல்)
- ஹிமான்ஷு நந்தல் - ஆடவர் 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் எஸ்பி11 (பாரா நீச்சல்)
- சரத் மகனஹள்ளி - ஆடவர் 1500 மீட்டர் டி12/டி13 (பாரா தடகளம்)
- ஹனி - ஆடவர் வட்டெறிதல் எஃப்37 (பாரா தடகளம்)
- சைலேஷ் குமார் - ஆடவர் நீளம் தாண்டுதல் டி42/டி61/டி63 (பாரா தடகளம்)
- ரோஹித் குமார் - ஆடவர் 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் எஸ்பி4 (பாரா நீச்சல்)
- சுஹாஸ் லலினகெரே யதிராஜ் - ஆடவர் ஒற்றையர் எஸ்எல்4 (பாரா பேட்மிண்டன்)
- சஞ்சனா குமாரி - பெண்கள் ஒற்றையர் எஸ்எல்3 (பாரா பேட்மிண்டன்)
- அபிஜீத் சகுஜா - ஆடவர் ஒற்றையர் எஸ்எல்4 (பாரா பேட்மிண்டன்)
- நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் கிருஷ்ணா நகர் - கலப்பு இரட்டையர் எஸ்எச்6 (பாரா பேட்மிண்டன்)
- மனிஷா ராமதாஸ் மற்றும் பிரமோத் பகத் - கலப்பு இரட்டையர் டபிள்யூஹெச்1-டபிள்யூஹெச்2 (பாரா பேட்மிண்டன்)
- ஆல்பியா ஜேம்ஸ் மற்றும் பல்லவி கலுவேஹள்ளி - பெண்கள் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 (பாரா பேட்மிண்டன்)
- சுபம் வாத்வா மற்றும் பவினா படேல் - கலப்பு இரட்டையர் கிளாஸ் எக்ஸ்டி7 (பாரா டேபிள் டென்னிஸ்)
- மனிஷா ராமதாஸ் - பெண்கள் ஒற்றையர் எஸ்யு5 (பாரா பேட்மிண்டன்)
- ராகுல் - ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 (பாரா தடகளம்)
- ஸ்வதிக் பாட்டீல் - ஆடவர் 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் எஸ்பி9 (பாரா நீச்சல்)
- தேஜஸ் நந்தகுமார் - ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் எஸ்7 (பாரா நீச்சல்)
- ரவன்னி வலசனைனி - பெண்கள் 400 மீட்டர் டி11 (பாரா தடகளம்)
- சூர்ய காந்த் யாதவ் மற்றும் நவீன் சிவகுமார் - ஆடவர் இரட்டையர் எஸ்எல்3-எஸ்யு5 (பாரா பேட்மிண்டன்)
- அஜய் குமார் - ஆடவர் 400 மீட்டர் டி64 (பாரா தடகளம்)
- ஜெஹான் மதன் மற்றும் சுபம் வாத்வா - ஆடவர் இரட்டையர் எம்டி4 (பாரா டேபிள் டென்னிஸ்)
- ஹிமான்ஷு நந்தல் - ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்11 (பாரா நீச்சல்)
- நவதீப் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்40/எஃப்41 (பாரா தடகளம்)
- ராகேஷ்பாய் பட் - ஆடவர் 100 மீட்டர் டி37 (பாரா தடகளம்)
- சந்தீப் - ஆடவர் 100 மீட்டர் டி44 (பாரா தடகளம்)
- சஞ்சய் சர்கார் - ஆடவர் ஈட்டி எறிதல் எஃப்42-எஃப்44/எஃப்61-எஃப்64 (பாரா தடகளம்)
- தர்மபீர் நைன் - ஆடவர் கிளப் த்ரோ எஃப்51 (பாரா தடகளம்)


Click it and Unblock the Notifications
