Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு 15வது தங்கம்.. ஆசிய பாரா போட்டியில் 21 செ.மீ. வித்தியாசத்தில் வென்ற சுவர்ணா ராஜ்

நகோயா: ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான எஃப்54 பிரிவு வட்டெறிதல் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சுவர்ணா ராஜ் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் நடப்பு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் சுவர்ணா ராஜ் அசாத்திய மன உறுதியுடன் செயல்பட்டார். தனது முதல் முயற்சியில் 13.68 மீட்டர் தூரம் வீசிய அவர், 2-வது வாய்ப்பிலேயே 15.09 மீட்டராக முன்னேறினார். பின்னர் 5-வது முயற்சியில் அதிகபட்சமாக 15.66 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து முதலிடத்தை உறுதி செய்தார். ஈரானின் ஷாஹித் ஹபீபி 15.45 மீட்டர் தூரம் வீசி மிகக் கடுமையான போட்டியைத் தந்தார். எனினும் வெறும் 21 சென்டிமீட்டர் வித்தியாசத்தில் அவரைப் பின்னுக்குத் தள்ளி சுவர்ணா ராஜ் வெற்றியைப் பதிவு செய்தார். வியட்நாமின் நுயேன் தி 14.65 மீட்டர் வீசி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Asian Para Games India hits 15th Gold Suvarna Raj Wins in Discus Throw Final with a Small Margin

தங்கம் வென்ற சுவர்ணா ராஜின் வாழ்க்கை பயணம் தன்னம்பிக்கை நிறைந்தது. தனது 2 வயதில் போலியோ நோயால் தாக்கப்பட்டு கால்கள் பாதிக்கப்பட்டாலும், சோர்ந்து போகாமல் பவர்லிஃப்டிங் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் முத்திரை பதித்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்றார். கடந்த 2017 முதல் தடகளத்தில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர், 2014, 2018 மற்றும் 2022 ஆகிய 3 ஆசிய பாரா போட்டிகளிலும் இந்தியாவுக்காக ஆடிய மூத்த வீராங்கனை ஆவார்.

தோனி இந்திய அணி கேப்டனானதில் சச்சின், சேவாக், யுவராஜ்-க்கு ஈகோ-வா? ஹர்பஜன் சிங் சொன்ன அதிரடி பதில்

தோனி இந்திய அணி கேப்டனானதில் சச்சின், சேவாக், யுவராஜ்-க்கு ஈகோ-வா? ஹர்பஜன் சிங் சொன்ன அதிரடி பதில்

விளையாட்டுடன் சேர்த்து மாற்றுத்திறனாளிகளுக்கான சம உரிமைக்காகப் போராடும் முன்னணி சமூகப் போராளியாகவும் இவர் திகழ்கிறார். அரசு கட்டடங்களில் ஆய்வு நடத்தி மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் சென்று வரும் பாதைகளை உருவாக்க உதவினார். தேர்தல் ஆணையத்தின் தூதராகவும் செயல்பட்டுள்ளார். இவருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் 2024 எஸ்டிஜி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

Story first published: Thursday, October 22, 2026, 7:44 [IST]
Other articles published on Oct 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+