Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் கிரிக்கெட் - ஓய்வு பெற்றார் ஆஸி. பவுலர் பிரெட் லீ

Australian pacer Brett Lee retires from test cricket
சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பிரெட் லீ, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்தடுத்து காயத்தால் அவதிப்பட்டு வந்தார் பிரெட் லீ. இதனால் அவரால் இனி கிரிக்கெட்டே விளையாட முடியாதோ என்ற அச்சம் ஏற்பட்டது. அதை உறுதிப்படுத்துவது போல பிரெட் லீ இனி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துமாறு ஆஸ்திரேலிய பயிற்சியாளர் அவருக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுத்துள்ளார் லீ. இதுகுறித்து சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய லீ, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இதன் மூலம் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் கவனம் செலுத்த முடியும் என நம்புகிறேன்.

33 வயதாகும் பிரெட் லீ கடந்த 1999ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் அறிமுகமானவர். 76 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே இதுவரை ஆடியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி முதல் அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இருந்து வந்தார்.

ஷான் வார்னே, கிளென் மெக்கிராத், டென்னிஸ் லில்லிக்குப் பின்னர் அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியவர் லீதான். இவர் மொத்தம் 310 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+