சிசிஎல் -5 நட்சத்திர கிரிக்கெட்: சென்னை அணியில் யார்? யார்?
சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டிகள் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி இன்று (ஜனவரி 10) தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடக்கிறது.
மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடக புல்டோசர், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், மும்பை ஹீரோஸ், பெங்கால் டைகர்ஸ், வீர் மராட்டி, போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன.
சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் கேரளா அணியை வரும் 11-ந்தேதி ஹைதராபாத்தில் எதிர்கொள்கிறது. அதைத்தொடர்ந்து பெங்களூரில் 18-ந்தேதி வீர் மராட்டி அணியுடனும், அகமாதாபாத்தில் 25-ஆம்தேதி மும்பை அணியுடனும் சென்னை அணி மோதுகிறது.

சென்னை அணி வீரர்கள்
இந்த ஆண்டு நடைபெறும் போட்டிக்கு சென்னை ரைனோஸ் அணிக்கு வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ரைனோஸ் அணியின் புதிய கேப்டனாக தேர்வாகியுள்ளார் ஜீவா.

விலகிய விஷால்
இதற்கு முன்பு அணியின் கேப்டனாக இருந்த விஷால் பொங்கல் ரிலீஸ், வருடத்திற்கு இரு படங்கள் என பிசியான காரணத்தால் சிசிஎல் போட்டியில் இருந்து விலகினார். அதை தொடர்ந்து புதிய கேப்டனாக ஜீவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஷ்ணு - விக்ராந்த்
துணை கேப்டன் பதவி விஷ்ணுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, ஆர்யா, விக்ராந்த், ரமணா, பரத், பிருத்வி, சாந்தனு, அசோக் செல்வன், பாலாஜி, ஷாம், போஸ் வெங்கட், சரண்குமார், உதயகுமார், சஞ்சய் பாரதி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சரியான ஆள் விஷால்
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் ஜீவா பேசிய போது, "கேப்டன்ஷிப்புக்கு விஷால் தான் சரியான ஆள். அவரது வேலைப்பளு காரணமாக கேப்டன்ஷிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கிறாரே தவிர, போட்டிகளில் அவர் கலந்துகொள்ளத்தான் இருக்கிறார்.

ரொம்ப டென்சன்தான்
சினிமாவை விட சி.சி.எல் போட்டியில் விளையாடுவது என்பது டென்ஷனான காரியம். நாங்கள் காமெடி பாய்ஸ் அல்ல ,சீரியசாக விளையாடுவோம். எல்லாரும் கடினமாக உழைத்து வருகிறோம்.

ரொம்ப சீரியஸ் போட்டி
நீங்களே பாருங்கள் கருத்து விட்டோம். அந்த அளவிற்கு நாங்கள் ஃபிட்டாக இருக்கிறோம்.சென்ற வருடம் ஆடியவர்களில் சிலர் இந்த வருடம் ஆடவில்லை, எங்களுக்கும் அதில் உடன்பாடில்லை எனினும் கமிட்டியின் முடிவுகளே இறுதியானது என கூறியுள்ளார் ஜீவா.

சன் டிவி ஒளிபரப்பு
எப்படியோ விஷால் இல்லாம கப் ஜெயிக்காம வந்துறாதீங்க.. கண்டிப்பாக கப் வாங்கிட்டு வாங்க என்கின்றனர் தமிழ் ரசிகர்கள். நாளை சென்னை அணியும், கேரளா அணியும் மோதும் போட்டியை சன்டிவி நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Click it and Unblock the Notifications