சென்னை : தமிழகத்தின் செல்லப் பிள்ளையாகவே தற்போது செஸ் வீரர் பிரக்ஞானந்தா மாறிவிட்டார். 18 வயதில் உலகளவில் சாதனை படைத்து பல முன்னணி வீரர்களை வீழ்த்தி வெள்ளி பதக்கத்துடன் நாடு திரும்பியிருக்கிறார்.
இந்த நிலையில் பிரக்ஞானந்தா தனது சிறுவயதில் செய்த ஒரு சுட்டித்தனத்தை பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

எப்படி சச்சின் டெண்டுல்கர் சிறுவயதிலே தாம் ஒரு ஜீனியஸ் என்பதை நிரூபித்தாரோ, அதேபோல் பிரக்ஞானந்தாவும் சிறுவயதிலே பல சாதனைகளை படைத்திருக்கிறார். இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று பிரக்ஞானந்தா அப்போது ஒரு சாதனையை படைத்திருந்தார்.அப்போது நிகழ்ந்த சம்பவம் ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார். அதில் பிரக்ஞானந்தா குறித்து அப்போது பலருக்கும் தெரிந்திருக்காது.
இதனால் செஸ் அமைப்பில் இருக்கும் ஒருவர் பத்திரிகையாளர் ஒருவரிடம் பிரக்ஞானந்தாவின் குடும்பத்தை பேட்டி எடுத்து அதனை வெளியிடுங்கள். அவருக்கு சில ஸ்பான்சர்கள் தேவைப்படுகிறது என்று கூறியிருந்தார். இதனால் பிரக்ஞானந்தா தனது குடும்பத்தினருடன் அலுவலகத்திற்கு பேட்டிக்காக வந்திருந்தார். அப்போது பிரக்ஞானந்தாவுக்கு எட்டு வயது தான் இருக்கும்.
பிரக்ஞானந்தாவின் பெயர் வித்தியாசமாக இருக்கும் என்பதால் அவருடைய பெயரை ஆங்கிலத்தில் அவரிடமே எழுதி கேட்டிருந்தேன். அப்போது அவரது பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது அதில் ஏ என்ற எழுத்து மட்டும் ஐந்து இருந்தது. இதனை பார்த்து 5 ஏ இருக்கிறது. நீ 'ஏ'பாயா அனைத்திலும் சிறந்த சிறுவனா என்ற பொருள்படும் வகையில் நான் கேட்டேன்.
ஆனால் சிறுவனான பிரக்ஞானந்தாவுக்கு அதற்கு அர்த்தம் புரியவில்லை. உடனே நோ சார் நான் c section-ல் படிக்கிறேன் என்று பதில் அளித்தார். இதைக் கேட்டவுடன் அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டோம் பிரக்ஞானந்தாவின் இந்த வளர்ச்சிக்கு அவருடைய தாயும், தந்தையுமே காரணம். இருவருமே பிரக்ஞானந்தாவுக்காக பல தியாகங்களை செய்து இருக்கிறார்கள் என அந்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.