For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சச்சினின் தீவிர ரசிகரா இருப்பாரோ.. ஒன்றரை ஆண்டுக்கு முன் சொன்ன வாழ்த்தை மாற்றாத பிரக்ஞானந்தா

சென்னை : தன்னுடைய 16 வயதில் எப்படி கிரிக்கெட் உலகை சச்சின் டெண்டுல்கர் ஆச்சரியப்படுத்தினாரோ அதேபோல் இளம் வயதிலேயே செஸ் உலகை தனது ஆட்டத்தால் மெர்சல் ஆக்கி இருக்கிறார் பிரக்ஞானந்தா.

பார்ப்பதற்கு பால் போன்ற முகம். நெற்றியில் பட்டை என தெய்வீக குழந்தை போல் இருக்கும் பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டில் கை வைத்தால் பீஸ்ட் போல் மாறிவிடுவார்.

Chess Prodigy Praggnanandhaa never changed sachin tweet since 18 months

பிரக்ஞானந்தா சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர் என்பது தற்போது தெளிவாகி இருக்கிறது. ஏனென்றால் பிரக்ஞானந்தா கடந்த ஒன்றரை ஆண்டில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். செஸ் ஒலிம்பியாட், செஸ் உலகக் கோப்பையில் வெள்ளி என பல தொடர்களில் கால் தடம் எடுத்து வைத்திருக்கிறார்.இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆன்லைன் செஸ் தொடரில் ஒன்றில் கார்ல்சனை முதல் முறையாக பிரக்ஞானந்தா வீழ்த்தி இருந்தார்.

அதற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்து அவரை வெகுவாக பாராட்டி டிவீட் போட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த பிரக்ஞானந்தா மிக்க மகிழ்ச்சி சார் உங்களிடம் இருந்து இந்த வாழ்த்தை நான் பெரிய விஷயமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால் பிரக்ஞானந்தா தன்னுடைய twitter பக்கத்தில் முகப்பிலே இந்த பதிவை தான் pin செய்து வைத்திருக்கிறார். பிரக்ஞானந்தாவின் டிவிட்டர் பக்கம் சென்றாலே முதலில் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்த பதிவு தான் தென்படுகிறது.இதன் பிறகு எத்தனையோ பேர் வாழ்த்து தெரிவித்தாலும் பிரக்ஞானந்தா சச்சினிடமிருந்து வந்த வாழ்த்தை மாற்றவே இல்லை.

ஏனென்றால் இளம் வயதிலேயே சாதனை படைப்பது எப்படி என்பது எல்லாம் சச்சின் போன்ற நபருக்கு தான் தெரியும் என்பதை பிரக்ஞானந்தா நன்கு அறிந்திருப்பார். பிரக்ஞானந்தா 2கே கிட்சாக இருந்தாலும் தீவிர சச்சின் டெண்டுல்கர் ரசிகராக இந்த ஒற்றை செயல் மூலம் தன்னை நிலைநாட்டி கொண்டுள்ளார்.

Story first published: Friday, August 25, 2023, 18:41 [IST]
Other articles published on Aug 25, 2023
English summary
Chess Prodigy Praggnanandhaa never changed sachin tweet since 18 months சச்சினின் தீவிர ரசிகரா இருப்பாரோ.. ஒன்றரை ஆண்டுக்கு முன் சொன்ன வாழ்த்தை மாற்றாத பிரக்ஞானந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+