Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடவரை முந்தும் மகளிர்... உலக செஸ் தரவரிசையில் 2வது இடம்பிடித்த கோனேரு ஹம்பி

டெல்லி : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி உலக செஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்திய அவரது சாதனைகள் அவருக்கு இரண்டாவது இடத்தை கொடுத்துள்ளது.

இதனிடையே கிராண்ட் மாஸ்டர் ஹரிகா துரோணவள்ளி 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சீனாவின் யிஃபான் ஹொ முதலிடத்தில் உள்ளார்.

இந்திய வீராங்கனைகள் முதல் பத்து இடங்களில் உள்ள நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட செஸ் வீரர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை. விஸ்வநாதன் ஆனந்த் 16வது இடத்திலும் விதித் சந்தோஷ் குஜராத்தி 22வது இடத்திலும் உள்ளனர்.

2வது இடம்பிடித்த கோனேரு ஹம்பி

2வது இடம்பிடித்த கோனேரு ஹம்பி

வீரர்களின் செயல்பாடு மற்றும் வெற்றிகளை அடிப்படையாக கொண்டு உலக செஸ் தரவரிசை பட்டியல் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான செஸ் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

கோனேரு ஹம்பி முன்னேற்றம்

கோனேரு ஹம்பி முன்னேற்றம்

குழந்தை பேற்றுக்காக இடைவெளி விட்டிருந்த கோனேரு ஹம்பி மீண்டும் சர்வதேச செஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ரேபிட் சாம்பியன் பட்டத்தை இவர் வெற்றி கொண்டு சாதனை புரிந்தார். இதையடுத்து பல்வேறு போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

வெற்றி கொண்ட கோனேரு

வெற்றி கொண்ட கோனேரு

இதனிடையே சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற கெய்ன்ஸ் கோப்பை போட்டியில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த ஜூ வென்ஜூன் ஆகியோரை வெற்றி கொண்டு கோப்பையை கைப்பற்றினார். இதன்மூலம் ஜூ வென்ஜூனை பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளார் கோனேரு.

கோனேரு 2586 புள்ளிகளுடன் 2வது இடம்

கோனேரு 2586 புள்ளிகளுடன் 2வது இடம்

இந்த பட்டியலில் சீன வீராங்கனை யிஃபான் ஹொ முதலிடத்தில் உள்ளார். இவர் 2658 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் கோனேரு ஹம்பி 2586 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். சமீபத்திய 3 எலைட் போட்டிகளை இவர் வெற்றி அல்லது சமன் செய்து இந்த புள்ளிகளை பெற்றுள்ளார்.

ஜூனியர் பிரிவில் தமிழ்நாட்டு வீராங்கனை

ஜூனியர் பிரிவில் தமிழ்நாட்டு வீராங்கனை

செஸ் தரவரிசை பட்டியலில் கிராண்ட் மாஸ்டர் ஹரிகா துரோணவள்ளி 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட ஜூனியர் பிரிவிற்கான பட்டியலில் தமிழ்நாட்டு செஸ் வீராங்னை வைசாலி 10வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இடம்பெறாத செஸ் வீரர்கள்

இடம்பெறாத செஸ் வீரர்கள்

இந்நிலையில் ஆடவருக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட வீரர்கள் யாரும் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை. விஸ்வநாதன் ஆனந்த் 16வது இடத்தில் உள்ள நிலையில், விதித் சந்தோஷ் குஜராத்தி 22வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த மாதத்தில் 26வது இடத்தில் இருந்த குஜராத்தி 4 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

முதலிடத்தில் மாக்னஸ் கார்ல்சன்

முதலிடத்தில் மாக்னஸ் கார்ல்சன்

உலக சாம்பியனாக உள்ள மாக்னஸ் கார்ல்சன், இந்த செஸ் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளார். இதனிடையே, ஜூனியர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் நிஹால் சரின் 10வது இடத்தை பிடித்துள்ளார். கோனேரு ஹம்பி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதற்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

Story first published: Monday, March 2, 2020, 12:52 [IST]
Other articles published on Mar 2, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+