Olympics 2021: தங்கத்துக்கு அடிச்சுக்கும் "மூவேந்தர்கள்".. தினமும் நீயா நானா பஞ்சாயத்துதான்!
ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே தான் மீண்டும் மீண்டும் கடும் போட்டி நிலவுகிறது.
உலகை அச்சுறுத்தும் இந்த கொரோனா காலக் கட்டத்தில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பதக்கங்களை வெல்ல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் மல்லுக்கட்டி வருகின்றனர்.

14 கோல்டு
டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலின் முதல் நாளே முதல் இடம் பிடித்தது சீனா தான். ஆனால், அதன்பிறகு அமெரிக்கா மெடல்களை குவித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை அமெரிக்கா தான் முதலிடத்தில் இருந்தது. நேற்று ஜப்பான் முதலிடத்தை கைப்பற்றியது. இன்று மீண்டும் சீனா முதல் இடத்தை தட்டிப் பிடித்துள்ளது. இன்று (ஜுலை.2) பிற்பகல் 3 மணி நிலவரப்படி, தங்கம் 14, வெள்ளி 6, வெண்கலம் 9 என மொத்தம் 29 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

ஜப்பான் மூன்றாமிடம்
அதேபோல், தங்கம் 13 வெள்ளி 14, வெண்கலம் 10 என மொத்தம் 37 பதக்கங்களுடன் அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது. தங்கம் 13, வெள்ளி 4, வெண்கலம் 5 என மொத்தம் 22 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்தில் உள்ளது. 8 தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 4 வது இடத்தில் உள்ளது.

பிரிட்டன் 6வது இடம்
மேலும், 7 தங்கம், 11 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன் ரஷ்யா 5 வது இடத்தில் உள்ளது. 5 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களுடன் இங்கிலாந்து 6 வது இடத்தில் உள்ளது. 4 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் 7 வது இடத்தில் தென்கொரியா உள்ளது. ஒரு வெள்ளியுடன் இந்தியா தரவரிசையில் 46 வது இடத்தில் உள்ளது.

நம்பிக்கை
பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அதன் பிறகு இந்திய அணிக்கு இதுவரை மெடலுக்கான வாய்ப்பு கிட்டவில்லை. எனினும், வில்வித்தை, பேட்மிண்டன் ஆகியவற்றில் இந்தியாவுக்கு நிச்சயம் மெடல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications