Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காமன்வெல்த் போட்டி: தங்கம் கிடைக்காததால் 6வது இடத்திலேயே நீடிக்கிறது இந்தியா...

கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில் நேற்று தங்கப் பதக்கம் எதுவும் கிடைக்காததால் பதக்கப் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி, இங்கிலாந்து அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலிடம்...

முதலிடம்...

38 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் என 105 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்து அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2வது இடத்தில்...

2வது இடத்தில்...

35 தங்கம், 32 வெள்ளி, 39 வெண்கலம் என 106 பதக்கங்களை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி பதக்கப் பட்டியலில் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

3வது இடம்....

3வது இடம்....

கனடா வீரர்கள் 22 தங்கம் உட்பட 51 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும், போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து 13 தங்கப் பதக்கங்களுடன் 39 பதக்கங்களை கைப்பற்றி 4-வது இடத்தில் உள்ளது.

5வது இடம்...

5வது இடம்...

12 தங்கம் உட்பட 36 பதக்கங்கள் வென்றுள்ள நியூசிலாந்து அணி, பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்து இந்தியாவை ஒரு இடம் பின்னுக்கு தள்ளியுள்ளது.

6வது இடம்...

6வது இடம்...

41 பதக்கங்கள் பெற்றிருந்தாலும், 10 தங்கப் பதக்கங்களே பெற்றுள்ள இந்திய அணி, பதக்கப்பட்டியலில் 6-வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

தங்கம் கிடைக்கவில்லை...

தங்கம் கிடைக்கவில்லை...

7-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் 4 வெள்ளி, 1 வெண்கலம் என ஐந்து பதக்கங்களை கைப்பற்றினர். போட்டி தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நாளும் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று வந்த இந்திய வீரர்கள் நேற்று ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 31, 2014, 9:31 [IST]
Other articles published on Jul 31, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+