Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 தங்கப்பதக்கம் கிடைத்தது... மீண்டும் 5-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா!

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இங்கிலாந்து அணி பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலைய்ல் நேற்று ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றதால், 6வது இடத்திலிருந்த இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், 44 தங்கம், 40 வெள்ளி, 39 வெண்கலம் என 123 பதக்கங்களை வென்றுள்ள இங்கிலாந்து அணி பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

தலா 36 தங்கம் மற்றும் வெள்ளி, 41 வெண்கலம் என 113 பதக்கங்களை கைப்பற்றியுள்ள ஆஸ்திரேலிய அணி பதக்கப் பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.

3, 4வது இடங்கள்...

3, 4வது இடங்கள்...

கனடா வீரர்கள் 27 தங்கம் உட்பட 65 பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர். போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து 14 தங்கப் பதக்கங்களுடன் 43 பதக்கங்களைக் கைப்பற்றி 4-வது இடத்தில் உள்ளது.

ஆறு பதக்கங்கள்...

ஆறு பதக்கங்கள்...

8-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என ஆறு பதக்கங்களை கைப்பற்றினர்.

5வது இடத்துக்கு முன்னேற்றம்...

5வது இடத்துக்கு முன்னேற்றம்...

அதனைத் தொடர்ந்து, பதக்கப்பட்டியலில் 13 தங்கம், 20 வெள்ளி, 14 வெண்கலம் என 47 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

6வது இடத்தில் நியூசிலாந்து...

6வது இடத்தில் நியூசிலாந்து...

பதக்கப் பட்டியலில் இந்தியாவுக்கு சவாலாக இருந்த நியூசிலாந்து அணி, 13 தங்கம் உட்பட 39 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Friday, August 1, 2014, 9:17 [IST]
Other articles published on Aug 1, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+