காமன்வெல்த் வரலாற்றில் முதல் முறை.. ஸ்குவாஷ் விளையாட்டில் 35 வயது வீரர் சாதனை
பிர்மிங்காம்: 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய அணி 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இதன் மூலம் 15 பதக்கங்களை வென்ற இந்திய அணி பதக்கப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

ஸ்குவாஷ் விளையாட்டில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் வில்ஸ்ட்ராப்புடன் , சௌரவ் கோஷல் பலப்பரீட்சை நடத்தினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சௌரவ் கோஷல் 3க்கு0 என்ற செட் கணக்கில் வென்று வெண்கலத்தை தட்டிச் சென்றார்.
காமன்வெல்த் விளையாட்டு.. ஒரே நாளில் 6 பதக்கங்களை உறுதி செய்ய வாய்ப்பு.. ஹாக்கியில் அசத்தல்
இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். பளுதூக்கும் போட்டியில் மகளிருக்கான 87 பிரிவில் இந்திய வீராங்கனை பூர்னிமா மொத்தமாக 228 கிலோ எடையை தூக்கி 5வது இடத்தையே பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.
இதே போன்று ஆடவருக்கான 109 கிலோ எடைப் பிரிவில் பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் லவ்பிரித் சிங் மொத்தமாக 335 கிலோ எடையை மொத்தமாக தூக்கி வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் நித்து கங்காஸ், ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications