Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லான் பவுல்ஸ் போட்டியில் சரித்திரம் படைத்த வீராங்கனைகள்.. காமன்வெல்த்-ல் இந்தியாவின் 4வது தங்கம்

பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் விளையாட்டில் தங்கம் வென்று இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர் 4 வீராங்கனைகள்.

Recommended Video

IND vs WI 3rd T20 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி *Cricket

காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணி 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தமாக 9 பதக்கங்களை பெற்றிருந்தது.

லான் பவுல்ஸ்

லான் பவுல்ஸ்

இந்நிலையில் இன்று இந்தியாவுக்கு 4வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மகளிருக்கான லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 17 - 10 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தினர்.

முதல் தங்கம்

முதல் தங்கம்

காமன்வெல்த் வரலாற்றில் இதுவரை லான் பவுல்ஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை இந்தியா சென்றதே இல்லை. முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சௌபே, பிங்கி, நயான்மோனி, ரூபா டிர்கே ஆகிய 4 வீராங்கனைகள் தங்கம் வென்று, லான் பவுல்ஸ் விளையாட்டு என்றால் என்னவென இந்திய ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

லான் பவுல்ஸ் போட்டி

லான் பவுல்ஸ் போட்டி

லான் பவுல்ஸ் என்பது 40 மீட்டர் நீலம் கொண்ட ஒரு மைதானத்தில் விளையாடப்படும் ஆட்டமாகும். ஒருவர், இருவர் அல்லது 4 பேர் கொண்ட அணியாக விளையாடலாம். இதில் ஒருவர் ஒரு சிறிய பந்தை உருட்டி விட வேண்டும். அந்த பந்து குறைந்தது 23 மீட்டர் வரையாவது சென்றிருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் மீண்டும் உருட்டிவிடப்படும். இதே போல பந்து 40 மீட்டர்களை தாண்டி வெளியேவும் சென்றுவிடக்கூடாது.

கணக்கீடு

கணக்கீடு

இதன்பின்னர் அந்த சிறிய பந்தை நோக்கி இரு அணி வீரர்களும் பெரிய பந்துகளை உருட்டிவிடுவார்கள். அந்த பந்துகள் சிறிய பந்துக்கு அருகில் இருந்தால் ஒரு புள்ளி என்ற கணக்கில் மதிப்பிடப்படும். அதன்படி 4 பேர் கொண்ட போட்டியில் ஒவ்வொரு வீராங்கனைக்கும் தலா 2 வாய்ப்புகள் தரப்பட்டு, பின்னர் கணக்கிட்டு முடிவு அறிவிக்கப்படும்.

Story first published: Tuesday, August 2, 2022, 21:12 [IST]
Other articles published on Aug 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+