தங்கம் வெல்லும் வீரருக்கு ஏழரை லட்சம் பரிசு-மத்திய அரசு
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு ரூ. 7.5 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். அதேபோல வெள்ளி வென்றால் ஐந்து லட்சமும், வெண்கலம் வெல்வோருக்கு ரூ. 3.5 லட்சமும் பரிசாக அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
காமன்வெல்த் பதக்க வேட்டை இன்று காலை தொடங்கியது. ஒவ்வொரு அணியும் குவிந்து கிடக்கும் பதக்கங்களை வேட்டையாடும் முயற்சியில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியா இந்த முறை நல்ல முன்னேற்றத்துடன் அதிக அளவில் பதக்கங்களை வெல்ல துடிப்புடன் களம் இறங்கியுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு 409 வீரர், வீராங்கனைகள் உள்பட 619 பேருடன் இந்தியா களம் இறங்கியுள்ளது. அனைத்து போட்டிகளிலும் இந்தியா போட்டியிடுகிறது.
கடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 4வது இடமே கிடைத்தது. ஆனால் இந்த முறை குறைந்தது 2வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என இந்தியா தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாகம் அளிக்கும் பரிசுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. அதன்படி தங்கம் வெல்லும் வீரர் அல்லது வீராங்கனைக்கு ரூ. 7.5 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா அறிவித்துள்ளார்.
வெள்ளிப் பதக்கமாக இருந்தால் ரூ. 5 லட்சமும், வெண்கலமாக இருந்தால் ரூ. மூன்றரை லட்சமும் பரிசாக அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications