Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நாளில் 3 தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர்கள்!

கிளாஸ்கோ: இந்திய மல்யுத்த வீரர்கள் நேற்று காமன்வெல்த் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை அடுத்தடுத்து வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து விட்டனர்.

இதில் 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான சுஷில் குமார் அபாரமாக மோதினார். அதேபோல அமீத் குமார், வினேஷ் பொகத் ஆகியோரும் ஆளுக்கு ஒரு தங்கத்தைத் தட்டிச் சென்றனர்.

ஆடவர் பிரிவு...

ஆடவர் பிரிவு...

நேற்றைய போட்டியில் ஆடவர் 125 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ராஜீவ் தோமர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

107 வினாடிகளில்...

107 வினாடிகளில்...

ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் வென்றவரான சுஷில் குமார், ஆடவர் 74 கிலோ ப்ரீஸ்டைல் பிரிவில் பாகிஸ்தானின் குவாமர் அப்பாஸை 107 விநாடிகளில் வீழ்த்தி தங்கத்தைத் தட்டிச் சென்று அனைவரையும் அதிசயிக்க வைத்தார்.

கடந்தாண்டும் தங்கம் வென்றவர்....

கடந்தாண்டும் தங்கம் வென்றவர்....

இவர் கடந்த 2010 காமன்வெல்த் போட்டியில் 66 கிலோ பிரிவில் தங்கம் வென்றவர் என்பது நினைவிருக்கலாம்.

48 கி பிரிவு...

48 கி பிரிவு...

அதேபோல 57 கிலோ பிரிவில் அமீத் குமார் தங்கம் வென்றார். மகளிர் பிரிவில், இளம் வீராங்கனை வினேஷ் பொகத், 48 கிலோ பிரிவில் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

கீதா பொகத்தின் சகோதரி...

கீதா பொகத்தின் சகோதரி...

19 வயதேயான வினேஷ், இன்னொரு மல்யுத்த வீராங்கனையான கீதா பொகத்தின் ஒன்று விட்ட சகோதரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. கீதா பொகத், 2010 காமன்வெல்த் போட்டியில் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் ஆவார்.

Story first published: Wednesday, July 30, 2014, 8:51 [IST]
Other articles published on Jul 30, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+