'ஹாட்ரிக்' வெற்றியை சுவைக்க காத்திருக்கும் டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இரு அணிகளும் மோதவுள்ளன.
டெல்லி அணி இரு வெற்றிகளுடன் தனது 3வது போட்டிக்கு வருகிறது. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டும் மோதி அதிலும் வென்று 2வது போட்டியாக டெல்லியை சந்திக்கிறது.
தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்தித்தது மும்பை. அதில் வென்றாலும் கூட ராஜஸ்தான் அணியின் யூசுப் பதான் போட்ட அபாரமான சதத்தால் மும்பை சற்று கலங்கித்தான் போனது.
இந்த நிலையில் 2வது போட்டியில் டெல்லியை வீழ்த்தும் வேகத்தில் மும்பை தயாராகி வருகிறது.
மும்பை அணியில் ஜாகிர்கான், லசித் மலிங்காவைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் சரிவர பந்து வீசவில்லை. இது அந்த அணிக்கு கவலை தரும் அம்சமாக உள்ளது.
வலிமை வாய்ந்த அணியான டெல்லியை சந்திக்கும்போது பந்து வீச்சிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என மும்பை கருதுகிறது.
அதேசமயம் டெல்லியைப் பொறுத்தவரை கேப்டன் கெளதம் கம்பீர், ஷேவாக் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். நடுக்கள வீரர்களும் பரவாயில்லை.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷேவாக் 75 ரன்களைக் குவித்தது டெல்லி அணிக்கு தெம்பூட்டுவதாக உள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்குக் குறையாமல் குவித்தால்தான் நல்லது என்பதால் டாஸ் வெல்வது முக்கியத்துவம் பெறுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications