ரியோ ஒலிம்பிக்ஸ்: மகளிர் 200 மீ ஓட்டத்திலும் தங்கம் வென்றார் ஜமைக்காவின் தாம்சன்!
ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் 200 மீ. ஓட்டத்திலும் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் தங்கம் வென்றார். ஏற்கனவே அவர் 100மீ ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமைக்கா வீராங்கனையான எலைன் தாம்சன் 21.78 வினாடிகளில் இலக்கை எட்டினார். இதன் மூலம் முதலிடத்தை பிடித்த அவர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அதேநேரத்தில் நடப்பு உலக சாம்பியனான நெதர்லாந்தின் டாஃப்னே ஷிப்பெர்ஸ் 21.88 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி வென்றார். அமெரிக்காவின் டோரி போவி 22.15 வினாடிகளில் கடந்து வெண்கலம் வென்றார்.

இந்த ஒலிம்பிக்ஸில் மகளிர் 100 மீ. ஓட்டத்திலும் எலைன் தாம்சன் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 1988-க்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் 100 மீ., 200 மீ. என இரு ஓட்டங்களிலும் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தாம்சன்.



Click it and Unblock the Notifications