Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னையே நான் உணர்றேன்... ரோகித் சர்மா சிலிர்ப்பு

மும்பை : கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் முடங்கியுள்ளன. வீரர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

Recommended Video

2011 World cup Finals Match Fixing issue..பரபர விசாரணை

இதனிடையே, பிசிசிஐ அறிவுறுத்தலின்பேரில் மும்பை இந்தியன்ஸ் அணி, தன்னுடைய வீரர்களுக்கு மைதானத்தில் பயிற்சியை துவக்கியுள்ளது.

3 மாதங்களுக்கு பிறகு தன்னுடைய நெட் பயிற்சியை துவக்கியுள்ள இந்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னை தான் உணர்வதாக சிலிர்ப்புடன் தெரிவித்துள்ளார்.

வீட்டில் முடங்கிய வீரர்கள்

வீட்டில் முடங்கிய வீரர்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் ஸ்தம்பித்துள்ளது. வீரர்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். பல்வேறு நாடுகள், பயிற்சிகள், போட்டிகள் என பரபரப்புடன் காணப்பட்ட அவர்களது வாழ்க்கை குடும்பத்தினருடன் ரிலாக்சாக கழிக்கும் வகையில் மாறிபோனது. ஆயினும் தங்களது பிட்னஸ் பயிற்சிகளை அவர்கள் வீட்டிலேயே தொடர்ந்து வருகின்றனர்.

வீரர்கள் துவக்கம்

வீரர்கள் துவக்கம்

என்னதான் பிட்னஸ் பயிற்சிகளை தொடர்ந்தாலும், மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சிதான் சிறப்பானது என்று முன்னணி வீரர்கள் பலர் கூறிவரும் நிலையில், தற்போது மீண்டும் மைதானங்களில் சில வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பௌலர் ஷர்துல் தாக்கூர் இந்திய வீரர்களில் முதல்முறையாக தன்னுடைய பயிற்சிகளை மைதானத்தில் துவக்கினார். ராஜ்காட்டில் புஜாராவும் பயிற்சியை துவக்கியுள்ளார்.

பிசிசிஐ அறிவுறுத்தல்

பிசிசிஐ அறிவுறுத்தல்

கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகள், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அணிகள் ஐபிஎல்லுக்கு தயாராகுமாறு பிசிசிஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மும்பையில் உள்ள தன்னுடைய வீரர்களுக்கு மைதானங்களில் பயிற்சிகளை மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது.

என்னையே நான் உணர்கிறேன்

என்னையே நான் உணர்கிறேன்

3 மாதங்களுக்கு பிறகு தற்போது ரோகித் சர்மா, மைதானத்தில் தன்னுடைய பயிற்சியை நேற்றுமுதல் துவக்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தன்னையே தான் உணர்வதாக அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். பயிற்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Story first published: Friday, June 26, 2020, 7:19 [IST]
Other articles published on Jun 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+