Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் ஹாட்ரிக் உடன் ஜப்பான் அபாரம்

குவஹாத்தி: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாவது நாளில், கீடோ நகமுராவின் ஹாட்ரிக் கோல்கள் அடிக்க, ஜப்பான் 6-1 என்ற கணக்கில் ஹோண்டுராஸ் அணியை சுலபமாக வென்றது.

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன.

Hat-trick for Japan


இ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜப்பான், ஹோண்டுராஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் குவஹாத்தியில் நேற்று இரவு நடந்தது.

துவக்கம் முதலே பரபரப்பாக இருந்த இந்த ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் நகமுரா முதல் கோலை அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே மற்றொரு கோல் அடிக்க, ஹோண்டுராஸ் அணி ஸ்தம்பித்தது. 30வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் அடித்தார் நகமுரா.

இந்த உலகக் கோப்பையில் முதல் ஹாட்ரிக் கோல் இதுவாகும். முதல் பாதியின் இறுதியில் ஜப்பான் 3-1 என்ற கணக்கில் முந்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் ஜப்பான் மேலும் 3 கோல்களை அடிக்க, வெற்றி மிகவும் சுலபமானது.

இ பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில், பிரான்ஸ் அணி 7-1 என்ற கணக்கில் கோல் மழை பொழிந்து, நியூ காலடோனியா அணியை வென்றது.

எப் பிரிவில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் சிலியை வென்றது. அதே நேரத்தில் ஈராக் - மெக்சிகோ ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்று நடக்கும் ஆட்டங்களில் ஏ பிரிவில் கானா -அமெரிக்கா, இந்தியா - கொலம்பியா மோதுகின்றன. பி பிரிவில் துருக்கி - மாலி, பராகுவே - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.





Story first published: Monday, October 9, 2017, 18:29 [IST]
Other articles published on Oct 9, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+