For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகழ்பெற்ற பார்முலா 1 கார் பந்தய இயக்குநர் சார்லி வைட்டிங் மரணம்.. விளையாட்டு உலகம் இரங்கல்

மெல்போர்ன்:பார்முலா ஒன் நிர்வாக அமைப்பின் தலைவரும், பல ஆண்டுகளாக விளையாட்டில் செல்வாக்கு மிக்க நபராகவும் இருந்த சார்லி வைட்டிங் காலமானார். அவருக்கு வயது 66.

அண்மை காலமாகவே கடும் நுரையீரல் நோயால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந் நிலையில், ஆஸ்திரேலிய கிரான்ட் பிரீ பந்தயத்தை தொடங்கி வைக்க அவர் மெல்போர்னில் இருந்தார். அப்போது அவருக்கு நுரையீரலில் ஏற்பட்டிருந்த பிரச்சனை மிகவும் தீவிரமடைந்தது.

Formula one race director charlie whiting dies

அதன் பாதிப்பு அதிகமானதோடு ரத்தக்கட்டும் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 66.
எப் 1 பந்தயத்தை உலகம் முழுதும் பல பகுதிகளில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சார்லி வைட்டிங். அந்த பந்தயங்களுக்கான விதிகளையும் அவர் தான் வகுத்தார்.

Also Read | ISL 2019 : பெங்களூரு அணியை இறுதியில் வெற்றி பெற வைப்பாரா பயிற்சியாளர் குவாட்ரெட்?

பார்முலா ஒன் நிர்வாகக் கமிட்டியில் தொழில்நுட்ப பிரிவின் இயக்குனராக 1988ம் ஆண்டில் சேர்ந்தார். அவரது மறைவு... எப் 1 விளையாட்டில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Story first published: Friday, March 15, 2019, 19:13 [IST]
Other articles published on Mar 15, 2019
English summary
Formula one race director charlie whiting dies
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X