Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

22 வயதுதான்.. அதற்குள் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஹனா கிமுரா.. அதிர வைத்த காரணம்!

டோக்கியோ : 22 வயதே ஆன ஹனா கிமுரா என்ற இளம் ரெஸ்லிங் வீராங்கனை தற்கொலை செய்து கொண்டார்.

Recommended Video

பிரபல Wrestling வீராங்கனை தற்கொலை... அதிர வைக்கும் காரணம்

அவரது இந்த அதிர்ச்சி முடிவுக்கான காரணம் இன்னும் அதிர வைப்பதாக உள்ளது. ரெஸ்லிங் வீராங்கனையான அவர் பிக் பாஸ் போன்ற ஒரு நெட்ப்ளிக்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

அப்போது முதல் அவரை கேலி செய்து, கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்து வந்தனர் இணையவாசிகள். அதை தாங்க முடியாத ஹனா கிமுரா தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளார்.

ஜப்பான் புரோ ரெஸ்லிங்

ஜப்பான் புரோ ரெஸ்லிங்

ஜப்பானை சேர்ந்த ஹனா கிமுராவின் தாய் க்யோகோ கிமுரா பிரபல ரெஸ்லிங் வீராங்கனை ஆவார். அவரைத் தொடர்ந்து ரெஸ்லிங் உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார் ஹனா கிமுரா. ஸ்டார்டம் ரெஸ்லிங் என்ற நிறுவனத்தில் இணைந்து ஜப்பான் புரோ ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

விரைவில் ஜப்பானில் பிரபலமான ரெஸ்லிங் வீராங்கனையாக மாறினார். அடுத்து அவர் உலகின் மிகப் பெரிய புரோ ரெஸ்லிங் நிறுவனமான WWEஇல் சேர்ந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அப்போது தான் ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

ஒரே வீட்டில் ஆறு பிரபலங்கள்

ஒரே வீட்டில் ஆறு பிரபலங்கள்

டெரெஸ் ஹவுஸ் என்ற அந்த நிகழ்ச்சியில் ஜப்பான் கலாச்சாரத்தை சேர்ந்த ஆறு பிரபலங்கள் ஒரே வீட்டில் வாழ வேண்டும். கிட்டத்தட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே தான். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது முதல் அவர் கடும் எதிர்ப்பை சந்திக்கத் துவங்கினார்.

இணையவாசிகள் விமர்சனம்

இணையவாசிகள் விமர்சனம்

அதற்கு முக்கிய காரணம், அதுவரை ரெஸ்லிங் நிகழ்ச்சிகளில் இருந்த ஹனா கிமுரா, அந்த நிகழ்ச்சியில் காணப்படவில்லை. அந்த நிகழ்ச்சியில் அவரது செயல்பாடுகளை இணையவாசிகள் பலர் விமர்சிக்கத் துவங்கினர். அதனால், ஹனா கிமுரா மன உளைச்சலுக்கு ஆளானார்.

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

22 வயதே ஆன இளம் பெண்ணான ஹனா கிமுராவால் இணைய உலகின் விமர்சனத்தை எளிதாக கடந்து போக முடியவில்லை. அதனால், தற்கொலை முடிவை அவர் எடுத்திருக்கலாம் என தெரிகிறது. அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில் தன் பூனையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். மகிழ்ச்சியாக இரு. என்னை மன்னித்து விடு" என எழுதி உள்ளார்.

காயமடைந்து விட்டேன்

காயமடைந்து விட்டேன்

அடுத்து தன் கடைசி ட்விட்டர் பதிவில், "தினமும் 100 வெளிப்படையான கருத்துக்கள். நான் காயமடைந்து விட்டேன் என்பதை என்னால் மறுக்க முடியவில்லை. நான் இறந்தே விட்டேன். எனக்கு ஒரு அம்மாவை கொடுத்ததற்கு நன்றி." என குறிப்பிட்டுள்ளார்.

விரும்பப்பட வேண்டும் என நினைத்தேன்

விரும்பப்பட வேண்டும் என நினைத்தேன்

மேலும், "நான் என் வாழ்க்கையில் விரும்பப்பட வேண்டும் என நினைத்தேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் என் நன்றி. நான் பலவீனமாக இருக்கிறேன். மன்னித்து விடுங்கள். நான் மனிதனாக இருக்கவே விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையில் விரும்பப்பட வேண்டும் என நினைத்தேன்" என அதே பதிவில் கூறி உள்ளார் ஹனா கிமுரா.

சைபர் புல்லியிங்

சைபர் புல்லியிங்

ஹனா கிமுராவின் மரணம் புரோ ரெஸ்லிங் உலகை அதிர வைத்துள்ளது. மேலும், "சைபர் புல்லியிங்" எனப்படும் எல்லை மீறிய இணைய சீண்டல்களை குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. WWEவில் இருக்கும் ஜப்பானை சேர்ந்த ரெஸ்லிங் வீராங்கனை அசுகா, ஹனா கிமுரா பற்றிய தன் நினைவுகளை பகிர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபலங்களுக்கும் மன உளைச்சல் ஏற்படும்

பிரபலங்களுக்கும் மன உளைச்சல் ஏற்படும்

மற்ற ரெஸ்லிங் வீரர்கள், வீராங்கனைகள் பலரும் சைபர் புல்லியிங்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எத்தனை பெரிய பிரபலமாக இருந்தாலும் கூட அவர்கள் இணையவாசிகளின் விமர்சனத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்ற உண்மையை இந்த சம்பவம் எடுத்துக் காட்டி உள்ளது.

Story first published: Sunday, May 24, 2020, 14:15 [IST]
Other articles published on May 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+