பிரீத்தி ஜிந்தாவிடமிருந்து பஞ்சாப் அணியை வாங்கவில்லை- ஹீரோ ஹோண்டா

மோட்டார் சைக்கிள் ஜாம்பவானும், ஐபிஎல் போட்டிகளுக்கான இணை ஸ்பான்சருமான ஹீரோ ஹோண்டா நிறுவனம், ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதை ஹீரோ ஹோண்டா மறுத்துள்ளது. அப்படி ஒரு விவாதமே நடைபெறவில்லை என்று அது அடியோடு மறுத்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஹீரோ ஹோண்டா நிறுவனம் வாங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை, தவறானவை.
எந்தக் கட்டத்திலும் பஞ்சாப் அணியை வாங்குவது குறித்து பேசக் கூட இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலைதான் பிரீத்தி ஜிந்தாவை உரிமையாளராகக் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஹீரோ ஹோண்டா வாங்கியதாக செய்திகள் வெளியாகின ஆனால் அதை உடனடியாக மறுத்து விட்டது ஹோண்டா.
மேலும், ஐபிஎல் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான தங்களது தொடர்புகள் பழையபடியே தொடருவதாகவும் அது உறுதிப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இணை ஸ்பான்சராக இருக்கும் ஹீரோ ஹோண்டா, டெல்லி அணியின் முக்கிய ஸ்பான்சராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3வது ஐபிஎல் தொடர் மார்ச் 12ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications