யுவராஜ் சிங் அபார பந்து வீச்சு-207 ரன்களில் சுருண்டது அயர்லாந்து

இங்கிலாந்தே இதே மைதானத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு புரட்டிப் போட்டு புல்டோசர் ஏற்றி காலி செய்து அசத்தியது அயர்லாந்து. இதனால் இன்றைய போட்டியில் அந்த அணியை இந்தியா சற்று முன் ஜாக்கிரதையுடனேயே சந்தித்தது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி, அயர்லாந்தை முதலில் பேட் செய்யப் பணித்தார். அவர்கள் ரன் குவிப்பதைத் தடுக்கும் வகையில் பீல்டிங் மற்றும் பந்து வீச்சு வியூகத்தை அமைத்தார் டோணி. அதற்கு நல்ல பலன் கிடைத்தது.
ஜாகிர்கான் பந்து வீச்சில் முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தது அயர்லாந்து. அடுத்த விக்கெட் மேலும் சில பந்துகளில் கிடைக்க இந்தியா உற்சாகமானது.
ஆனால் அதற்குப் பின்னர் கேப்டன் போர்ட்டர்பீல்டும், நியால் ஓ பிரையனும் நிதானமாக ஆடி ரன் சேர்க்க ஆரம்பித்தனர். இதனால் விக்கெட் விழவில்லை. இந்தியத் தரப்பில் சற்று சோர்வு தெரிய ஆரம்பித்தது.
இந்த நிலையில்தான் யுவராஜ் சிங் மூலம் இந்தியாவுக்கு புத்துணர்ச்சி கிடைத்தது. சிறப்பாக பந்து வீசிய யுவராஜ் சிங் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.
சதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போர்ட்டர்பீல்ட் 75 ரன்களில் யுவராஜிடம் வீழ்ந்தார். ரன் குவிப்பில் குதித்த குசாக்கையும் யுவராஜ் சிங்கே வீழ்த்தினார்.
தொடக்கத்தில் ஜாகிர்கான் 2 விக்கெட்களை வீழ்த்தியதும், ஆட்டம் முழுவதும் யுவராஜ் சிங் அசத்தியதும், இந்தியாவுக்கு பெரும் பலமாக அமைந்தது.
முக்கிய வீரர்களான நியால் ஓ பிரையன், கெவின் ஓ பிரையன் ஆகியோரை சொற்ப ரன்களில் இந்தியா வீழ்த்தியதால் அயர்லாந்து அணியால் ரன் குவிக்க முடியாமல் போனது.
இந்தியப் பந்து வீச்சில் ஜாகிர், யுவராஜ் சிங் பந்து வீச்சு சிறப்பாக இருந்தாலும் மற்றவர்களின் பந்து வீச்சு அவ்வளவு பிரமாதம் என்று சொல்ல முடியாது.
யுவராஜ் சிங் சிறப்பாக பந்து வீசிய போதிலும் விக்கெட் கிடைக்கவில்லை. பியூஷ் சாவ்லா பந்து வீச்சை அயர்லாந்துக்காரர்கள் பிரித்து மேய்ந்து விட்டனர். 8 ஓவர்கள் வீசிய அவர்56 ரன்களை வாரிக் கொடுத்தார்.
இறுதியில், 47.5 ஓவர்களில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 207 ரன்களை எடுத்தது.
இந்தியத் தரப்பில் யுவராஜ் சிங் 5 விக்கெட்களைச் சாய்த்தார். இது அவருக்கு முதல் ஐந்து விக்கெட் பவுலிங் ஆகும். ஜாகிர்கான் 3 விக்கெட்களை எடுத்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications