Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் 71வது குடியரசு தினக் கொண்டாட்டம் -சச்சின், சாய்னா வாழ்த்து

டெல்லி : நாடெங்கிலும் 71வது குடியரசு தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வலிமையான மற்றும் வளமான இந்தியா அமைய நாட்டு மக்கள் அனைவரும் கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல சாய்னா நேவால் உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தங்களது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாடெங்கிலும் கோலாகல கொண்டாட்டம்

நாடெங்கிலும் கோலாகல கொண்டாட்டம்

இந்தியாவின் 71வது குடியரசு தினவிழாவையொட்டி நாடெங்கிலும் பல்வேறு கொண்டாட்டங்களில் தலைவர்கள், நாட்டு மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

வளமான இந்தியா அமைய கூட்டு முயற்சி

குடியரசு தினத்தையொட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வளமான மற்றும் வலிமையான இந்தியா அமைய மக்கள் அனைவரும் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இணைந்திருப்பதே வெற்றி

இதேபோல இந்திய கேப்டன் விராட் கோலியும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அனைவரும் இணைந்து இருப்பதே வெற்றி என்று கூறி தனது வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளார்.

புஜாரா வாழ்த்துப்பதிவு

இதனிடையே, முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்வதாக டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்வர் புஜாரா தனது டிவிட்டர் பதிவில், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மறக்காமல், அவர்கள் பாதையில் சென்று இந்தியாவை முன்னேற்ற கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோர் வாழ்த்து

கடந்த 2004ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்ற கர்னல் ராஜ்யவர்தன் ரத்தோரும் குடியரசு தினத்தையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சாய்னா நேவால் வாழ்த்து

இதேபோல இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Story first published: Sunday, January 26, 2020, 13:21 [IST]
Other articles published on Jan 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+