Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையோடு நாளை 2வது போட்டி- பீல்டிங்கில் அசத்துமா இந்தியா?

நாக்பூர்: நாளை நாக்பூரில் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியி்ல் யுவராஜ் பங்கேற்பாறா என்ற சந்தேகம் நீடிக்கிறது. ராஜகோட்டில் வெளுத்து வாங்கிய இந்திய அணியினர் அதே வெற்றியை நாக்பூரிலும் பெற பவுலிங் மற்றும் பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்த தயாராகி வருகின்றனர்.

இந்திய அணியில் யுவராஜ் இல்லாமல் போனால் அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளிக்கும். அதுபோல வீரேந்திர ஷேவாக்கிற்கும் ராஜ்கோட் ஆட்டத்தின் போது முட்டியில் அடிபட்டது.

ஆனால், ஷேவாக் நாளைய ஆட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார். இந்நிலையில் இந்திய ஸ்கோர் போர்டில் ராஜ்கோட் ஆட்டம் போலவே ரன் மழை கொட்டுமா என்ற எதிர்பார்ப்பில் நாக்பூரில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இலங்கை அணியிலும் முரளிதரன் மற்றும் தில்லாரா ஃபெர்ணான்டோ ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக முத்துமுதலாலிகே புஷ்பகுமாரா மற்றும் இளம் ஆஃப் ஸ்பின்னரான சூரஜ் ரன்திவ் ஆகியோர் களமிறங்குகின்றனர். இவர்களுடன் லசி்த் மலிங்காவும் நாளைய ஆட்டத்தி்ல் களமிறங்குவார்.

மொத்தம் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியில் இருந்தாலும், ராஜ்கோட்டில் கடந்த ஆட்டத்தின் பரபரப்பையும், வெற்றி வித்தியாசத்தையும் பார்த்தால் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாகவே கருதப்படுகிறது.

தெலுங்கானா விவகாரம் தொடர்பான பிரச்னைகளால் விசாகப்பட்டினத்தில் இருந்து மாற்றப்பட்ட இந்த நாக்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இங்கு நிலவும் வானிலை மற்றும் ஈரப்பதம் நிச்சயம் ஆட்டத்தின் போக்கை மாற்றும் என நம்பப்படுகிறது.

ராஜ்கோட்டில் ஷேவாக் உட்பட பேட்ஸ்மேன்கள் பட்டையை கிளப்பியது போல இங்கு நடப்பதற்கு வானிலை எந்தளவுக்கு ஒத்துழைக்கும் என்பது கேள்விக்குறியே. எனவே ஆட்டத்தின் வெற்றி தோல்வியை பீல்டிங் மற்றும் கேட்சுகளே தீர்மானிக்கும்.

இங்குள்ள தட்பவெப்ப நிலை ஃபீல்டர்களுக்கு மிகவும் சலாலானது. மேலும் பந்து ஈரப்பதமாவது பவுலர்களின் வியூகங்களை பாதிக்கும். இரு அணிகளிலும் பேட்டிங் வரிசை பிரமாதமாக இருக்கும் நிலையில் பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் இரு அணிகளும் போராட வேண்டியிருக்கும்.

இதைப் பொறுத்தே வெற்றி, தோல்வியும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் தரப்பிலும் நாளைய ஆட்டத்தில் விளையாடுவோர் விவரம்:

இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர ஷேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங்(சந்தேகம்), சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், பிரவீ்ன் குமார், ஆஷிஷ் நெஹரா, பிரயான் ஓஜா, சுதீப் தியாகி, விராட் கோலி.

இலங்கை: குமார சங்ககாரா (கேப்டன்), திலகரத்னே தில்ஷான், சனத் ஜெயசூர்யா, மஹேலா ஜெயவர்த்தனே, திலினா கடம்பி, சமர கபுகெதேரா, நுவன் குலசேகரா, லசித் மலிங்கா, எஞ்சலோ மேத்யூஸ், ஆஜந்தா மெண்டிஸ், திலன் சமரவீரா, உபுள் தரங்கா, சனக வெலிகேதாரா, முத்துமுதலிகே புஷ்பகுமாரா, சூரஜ் ரன்திவ்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:33 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+