Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேயன் ஸ்மித்தின் கனவைத் தகர்த்த இந்தியா...!

டெல்லி: நீதிமன்றம் கண்டிராத விசித்திரம் இது என்று பராசக்தியில் வசனம் வரும். அப்படித்தான் ஆகியுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர் வேயன் ஸ்மித்தின் நிலையும். கடந்த 10 வருடமாக அவர் கிரிக்கெட் ஆடி வருகிறார். 92 ஒரு நாள் போட்டிகளில் ஆடி விட்டார். ஆனால் இதுவரை ஒரு சதம் கூட போட்டதில்லை.

நேற்று டெல்லியில் நடந்த இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டியில் பிரமாதமாக ஆடிய ஸ்மித், 97 ரன்களில் பரிதாபமாக அவுட்டாகி விட்டார். அவரது 10 வருட சதக் கனவு நேற்றும் கை கூடாமல் போய் விட்டது.

நேற்று ஸ்மித் ஆடியது அவரது 93வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை ஒரு சதம் கூட போடாமல் கிட்டத்தட்ட 100 ஒரு நாள் போட்டிகளை நெருங்கிய முதல் வீரர் ஸ்மித்தாகத்தான் இருப்பார்.

அபாரமான ஆட்டம்

அபாரமான ஆட்டம்

நேற்றைய போட்டியல் முதலில் ஆடிய இந்தியா 263 ரன்களைக் குவித்தது. பின்னர் மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடங்கியது. ஸ்மித் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆடத் தொடங்கினார்.

அடித்து நொறுக்கிய வேகம்

அடித்து நொறுக்கிய வேகம்

ஸ்மித்தின் பேட்டில் பட்ட பந்துகள் நாலாபுறமும் தெரித்து ஓடின. இதனால் இந்தியப் பந்து வீச்சாளர்கள் கடுப்பாகி விட்டனர்.

11 ஃபோர்.. 2 சிக்ஸ்

11 ஃபோர்.. 2 சிக்ஸ்

அபாரமாக ஆடிய ஸ்மித் 11 பவுண்டரிகளையும், 2 சிக்ஸர்களையும் விளாசினார். 97 பந்துகளைச் சந்தித்து 97 ரன்களை எடுத்த நிலையில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார் ஸ்மித்.

36வது ஓவரில் வீழ்ந்தார்

36வது ஓவரில் வீழ்ந்தார்

36வது ஓவர் வரை ஸ்மித்தின் ஆட்டம் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அவர் இருந்தவரை நிச்சயம் மேற்கு இந்தியத் தீவுகள் வென்று விடும் போலத்தான் இருந்தது. அவர் போன பிறகுதான் ஆட்டம் இந்தியாவுக்குச் சாதகமாக மாறியது.

ஒரு சதம் போட முடியலையே

ஒரு சதம் போட முடியலையே

நேற்றைய போட்டி குறித்து ஸ்மித் கூறுகையில், எனது முதல் சதத்திற்காக நான் போராடுவது வேதனை தருகிறது. இன்றைய போட்டியில் சதம் அடிப்பேன் என நினைத்தேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. இது ஏமாற்றமாக உள்ளது என்றார்.

3வது போட்டியி்ல் பார்க்கலாம்

3வது போட்டியி்ல் பார்க்கலாம்

அக்டோபர் 14ம் தேதி விசாகப்பட்டனத்தில் 3வது ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது. அதிலாவது ஸ்மித் சதம் அடிக்கிறாரா என்று பார்க்கலாம்.

சென்னை வீரர்

சென்னை வீரர்

ஸ்மித் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி ரன்களைக் குவித்தவர் ஆவார். அதற்கு முந்தைய தொடர்களில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியவர் ஆவார்.

Story first published: Sunday, October 12, 2014, 15:38 [IST]
Other articles published on Oct 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+