Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போச்சு.. ஜப்பானில் அவசர நிலை பிரகடனம்..? ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதில் சிக்கல்?

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், டோக்கியோவில் அவசரகால நிலையை விதிக்க ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

கடந்த முறை கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு தற்போது இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 ஜப்பான் அரசு

ஜப்பான் அரசு

உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்தாண்டு கொரோனா காரணமாக நடைபெறாமல் போனது. இந்தாண்டு புதுவகை கொரோனாவுக்கு மத்தியிலும் டோக்கியோவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜப்பான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 அவசரகால நிலை

அவசரகால நிலை

ஒலிம்பிக்கில் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளுக்கும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன்படி அனைத்து நாடுகளை சேர்ந்த வீரர்களும் டோக்கியோவிற்கு கிளம்புவதற்கு 4 நாட்களுக்கு முன்னதாக 2 முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், அதில் நெகட்டீவ் என முடிவு வந்தால் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், டோக்கியோவில் அவசரகால நிலையை விதிக்க ஜப்பான் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

இந்த அவசரகால நடவடிக்கைகள், வழக்கமான அவசரகால நடிவடிக்கைகளை விட குறைவானதாகவே இருக்கும். இது ஆகஸ்ட் 22 வரை நடைமுறையில் இருக்கும் என்று பல ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒலிம்பிக் விளையாட்டு தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது.

 பார்வையாளர்கள் இன்றி

பார்வையாளர்கள் இன்றி

இது குறித்து ஜப்பான் ஊடகமான என்.ஹெச்.கே கூறுகையில், "டோக்கியோவில் நான்காவது அவசரகால நிலையை அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்து, அந்த முடிவும் ஆளும் கட்சிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், ஒலிம்பிக் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி, அரங்கிற்குள் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

Story first published: Wednesday, July 7, 2021, 21:09 [IST]
Other articles published on Jul 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+