Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Olympics: அமெரிக்கா, சீனாவை விஞ்சிய ஜப்பான்.. வந்து குவியும் தங்கம்.. "நம்பர்.1" இடம் - கெத்து

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

உலகை அச்சுறுத்தும் இந்த கொரோனா காலக் கட்டத்தில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பதக்கங்களை வெல்ல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் மல்லுக்கட்டி வருகின்றனர்.

11 கோல்டு

11 கோல்டு

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலின் முதல் நாளே முதல் இடம் பிடித்தது சீனா தான். ஆனால், அதன்பிறகு அமெரிக்கா மெடல்களை குவித்து வருகிறது. நேற்று வரை அமெரிக்கா தான் முதலிடத்தில் இருந்தது. சீனாவும் சளைக்காமல் பதக்கங்களை அள்ளி வருகிறது. இன்று (ஜுலை.28) மதியம் 2 மணி நிலவரப்படி, ஜப்பான் தங்கம் 11, வெள்ளி 4, வெண்கலம் 5 என மொத்தம் 20 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

சீனா மூன்றாமிடம்

சீனா மூன்றாமிடம்

அமெரிக்கா தங்கம் 10 வெள்ளி 10, வெண்கலம் 9 என மொத்தம் 29 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. சீனா தங்கம் 10, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 23 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது. ரஷ்யா 7 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது.

பிரிட்டன் 6வது இடம்

பிரிட்டன் 6வது இடம்

ஆஸ்திரேலியா 6 தங்கம், 1 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் 5 வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 5 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் 6 வது இடத்தில் உள்ளது. தென்கொரியா 3 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் 7 வது இடத்தில் உள்ளது. ஒரு வெள்ளியுடன் இந்தியா தரவரிசையில் 41 வது இடத்தில் உள்ளது.

ஒரே மெடல்

ஒரே மெடல்

பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அதன் பிறகு இந்திய அணிக்கு சில வாய்ப்புகள் கிடைத்தும் அதனை மெடலாக மாற்றும் வாய்ப்பு கை நழுவிப் போனது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இளவேனில் வாலறிவன் உட்பட சில வீரர், வீராங்கனைகள் ஆட்டம் பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. எனினும், இந்திய அணி இன்னும் சில பதக்கங்களை நிச்சயம் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, July 28, 2021, 16:47 [IST]
Other articles published on Jul 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+