Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவா இத சொன்னது... கல்யாணத்தின் போது நடந்த செம க்யூட் நிகழ்வு... இணையத்தில் வைரலாகும் வீடியோ

கோவா: திருமணத்தின் போது ஜஸ்பிரித் பும்ரா சஞ்சனாவுக்காக தெரிவித்த வார்த்தைகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா சமீபத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேஷனை கோவாவில் கரம்பிடித்தார்.

இந்நிலையில் பும்ராவின் திருமண வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் சஞ்சனாவுக்காக பும்ரா தெரிவித்த வார்த்தைகள் வைரலாகி வருகிறது.

 கோவாவில் திருமணம்

கோவாவில் திருமணம்

இங்கிலாந்துடனான டி20 தொடரில் இருந்து விலகிய ஜஸ்பிரித் பும்ரா, திடீரென தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி தொலைக்காட்சி தொகுப்பாளினியான சஞ்சனா கணேஷனை கடந்த 14ம் தேதி கோவாவில் கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்தில் வெறும் 20 நபர்களே கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில் செல்போன்களும் தடை செய்யப்பட்டன. இதனால் இணையம் வாயிலாக பலரும் பும்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

பின்னர் அவர் தனது மனைவி சஞ்சனாவுடன் இருக்கும் புகைகப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் கடந்த சில தினங்கள் மிகவும் அதிசயமானதாக உள்ளதாக கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ரசிகர்களிடம் இருந்து தங்களுக்கு கிடைத்துள்ள அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்திருந்தார்.

வைரல்

வைரல்

இந்நிலையில் பும்ரா - சஞ்சனா திருமண வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் முழுக்க முழுக்க பஞ்சாப் மக்கள் முறைப்படி கோலாகலமாக திருமணம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடியோவின் கேப்ஷனில், நீங்கள் ஏன் சஞ்சனாவை திருமணம் செய்துக்கொள்கிறீர்கள் என பும்ராவிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்கு பும்ரா அவள் தான் எனது உலகம் என தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கண்ட ரசிகர்கள், அடடா என்ன ஒரு ஜோடி என மெய் சிலிர்த்துள்ளனர்.

 புகைப்பட சர்ச்சை

புகைப்பட சர்ச்சை

பும்ராவின் திருமண புகைப்படம் சமீபத்தில் வெளியானது. அதில் பட்டாசுக்கள் வெடிக்கப்படும் காட்சி இருந்தது. ஆனால் கடந்த 2017ம் ஆண்டு தீபாவளியன்று பும்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டார். அதில் தீபாவளி வாழ்த்துடன் சேர்த்து பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும் எனக்கூறி #saynotocrackers என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தான் கூறியதை தானே பின்பற்றாமல் திருமணத்தன்று பட்டாசை பயன்படுத்தியதாக பும்ராவை ரசிகர்கள் கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 23, 2021, 23:39 [IST]
Other articles published on Mar 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+