Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோட்சே கோல் போட்டபோது இவர்தான் மனசு பூராவும் நிறைந்திருந்தாராம்....!

ரியோ டி ஜெனீரோ: ஜெர்மனிக்கு 4வது உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள அந்த அணியின் ஸ்டார் வீரர் மரியோ கோட்சே, போட்டியின் முடிவில் தனது காதலிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

சும்மா சொல்லக் கூடாது, கோட்சேவின் முழு எனர்ஜிக்கும் அவரது காதலி ஆன் காத்ரின் பிரோமல் விடா 100 சதவீதம் பொருத்தமானவராகவே இருக்கிறார்.

இப்போது எல்லோரும் கோட்சேவை விட்டு விட்டு அவரது காதலி பற்றித்தான் தேடித் தேடிப் படிக்கிறார்கள்.. படம் பார்க்கிறார்கள்!

காதலியே காதலியே...

காதலியே காதலியே...

கோட்சேவின் காதலியான ஆன், ஒரு மாடல் அழகி ஆவார். சாதாரண மாடல் அழகி அல்ல, கவர்ச்சிகரமான மாடல் அழகி.

உருகி உருகி

இவரும் கோட்சேவும் உருகி உருகி காதலித்து வருகிறார்களாம். ஒவ்வொரு போட்டியின்போதும் கோட்சேவை மைதானத்திற்கு வந்து உற்சாகப்படுத்தி குரல் கொடுக்கத் தவறவில்லை ஆன்.

வெற்றியின் நாயகி

வெற்றியின் நாயகி

கோட்சேவின் சிறப்பான செயல்பாட்டுக்கு அவரது காதலியும் ஒரு காரணம் என்றால் அது எக்ஸ்ட்ரா வார்த்தையாக நிச்சயம் இருக்க முடியாது.

டிவிட்டரில் தொடர் ஆதரவு

தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கோட்சேவுக்கு ஆதரவு தெரிவித்தும், ஜெர்மனியை வாழ்த்தியும் செய்தி போட்டுக் கொண்டே இருந்தார் ஆன்.

கட்டி அணைத்து வாழ்த்து

கட்டி அணைத்து வாழ்த்து

ஜெர்மனி கோப்பையை வென்றதும் கோட்சேவை விட அவரது காதலி ஆன்தான் பெரும் உற்சாகத்தில் மூழ்கித் திளைத்தாராம். மைதானத்திலேயே அவர்களது கொண்டாட்டம் தொடங்கி விட்டது.

முத்தம் கொடுத்து.. போட்டோ எடுத்து

கோட்சேவுக்கு முத்தம் கொடுத்தும், அவரது புன்னகை, சந்தோஷத்தை, உற்சாகத்தை, விதம் விதமாக தனது செல்போனில் போட்டோ எடுத்தும் பரவசப்பட்டார் ஆன்.

மைதானத்தில் கரைபுரண்ட காதல்

மைதானத்தில் கரைபுரண்ட காதல்

கோட்சேவும், ஆனும், சக வீரர் ஜெரோம் போடெங்கின் இரட்டைக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சியும், ஓடி ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

அதேபோல, மரியோ கோட்சேவின் வெற்றிக்கும், எனர்ஜிக்கும் அவரது காதலி ஆன்தான் காரணம். இப்படித்தான் இருக்க வேண்டும் காதலி என்றும் பலரும் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஆனைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

நல்ல விருந்துதான்

நல்ல விருந்துதான்

ஒரு குசும்புக்காரர், ஆனின் படு கவர்ச்சிகரமான படத்தை அவரது டிவிட்டர் பக்கத்தில் போட்டு, இன்னிக்கு ஆனுக்கு நல்ல விருந்து கொடுத்திருப்பார் கோட்சே என்று கிளுகிளுப்பான ஒரு கமெண்ட்டைத் தட்டி விட்டுள்ளார்.

நல்ல தோழி வேணுமா.. ஆனைப் போய்ப் பாருங்கப்பா

நல்ல தோழி வேணுமா.. ஆனைப் போய்ப் பாருங்கப்பா

இன்னும் ஒருவரோ, உங்களுக்கு நல்ல தோழி வேண்டுமா, அதற்குப் பொருத்தமானவர் ஆன்தான் என்றும் கமெண்ட் போட்டுள்ளார்.

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

இன்னொருவரோ, ஆனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர் சொன்னால் சொன்னது நடக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ரிஹானால்லாம் ஜுஜுபி

ரிஹானால்லாம் ஜுஜுபி

இன்னொருவரோ கோட்சேவுக்கு ரிஹானாவெல்லாம் தேவையே இல்லை.. ஆன் ஒருவர் போதும் என்று போகிற போக்கில் அர்ஜென்டைனா கோல் கீப்பர் ரொமிரோவின் மனைவியை வாரி விட்டுப் போயுள்ளார். அர்ஜென்டைனா வென்றால் தனது கணவரை ரிஹானாவிடம் ஒரு வாரம் அனுப்பத் தயார் என்று ரொமிரோவின் மனைவி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

பரபரப்பு முடிந்து விட்டது.. இது கிளுகிளுப்பு நேரம் போல.. நடக்கட்டும்.. நடக்கட்டும்!

Story first published: Monday, July 14, 2014, 17:07 [IST]
Other articles published on Jul 14, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+