Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குளோஸ் போட்ட ஸ்வீட் 16… !

போர்டலெஸா: ஜெர்மனியின் மிரஸ்லோவ் குளோஸ் புதிய சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை பிரேசில் முன்னாள் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ போட்டிருந்த 15 கோல்கள்தான் சாதனையாக இருந்தது.

அதை சமீபத்தில் குளோஸ் சமன் செய்திருந்தார். தற்போது ரொனால்டோவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

கானாவுடன் நடந்த போட்டியின்போது

கானாவுடன் நடந்த போட்டியின்போது

கானாவுடன் நடந்த போட்டியின்போது தனது 16வது உலகக் கோப்பை கோலை அடித்து அசத்தினார் குளோஸ்.

36 வயதில்

36 வயதில்

36 வயதாகும் போலந்தைச் சேர்ந்த குளோஸ், ஜெர்மனி அணியின் நீண்ட கால ஸ்டார் வீரர் ஆவார்.

4வது உலகக் கோப்பை

4வது உலகக் கோப்பை

தற்போது குளோஸ் தனது 4வது உலகக் கோப்பை போட்டியில் ஆடி வருகிறார்.

முதலில் சமன்.. பின்னர் சாதனை

முதலில் சமன்.. பின்னர் சாதனை

முதலில் ரொனால்டோவின் 15 கோல் சாதனையை சமன் செய்த குளோஸ் அடுத்து கானாவுடன் நடந்த போட்டியில் முறியடித்தார்.

2-2 டிரா

2-2 டிரா

கானா, ஜெர்மனி இடையிலான இப்போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்தக் கதை தெரியுமா

இந்தக் கதை தெரியுமா

இதற்கு முன்பு ரொனால்டோ, ஜெர்மனியின் தாமஸ் முல்லரின் 14 கோல் உலகக் கோப்பை சாதனையை முறியடித்தபோது அந்த உலகக் கோப்பைப் போட்டியை ஜெர்மனிதான் நடத்தியது. தற்போது ஜெர்மனியைச் சேர்ந்த வீரர் ஒருவர் ரொனால்டோவின் சாதனையை முறியடித்துள்ளார்.

70வது கோல்

70வது கோல்

இதுவரை 133 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள குளோஸ் போட்ட 70வது கோலாகும் இது.

Story first published: Monday, June 23, 2014, 15:02 [IST]
Other articles published on Jun 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+