Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ்-ஆல் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்த முகேஷ் அம்பானி!!

மும்பை : பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள விளையாட்டு அணிகளின் பணக்கார உரிமையாளர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி முதல் இடம் பிடித்துள்ளார்.

உலக பணக்காரர்கள் பலரும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த விளையாட்டு அணிகளை ஃபிரான்சைஸ் முறையில் வாங்கி, நிர்வகித்து வருகின்றனர். சிலர் இதை பொழுதுபோக்காகவும், பலர் இதை வருமானம் ஈட்டும் பொழுதுபோக்கு வியாபாரமாகவும் செய்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானி முதல் இடம்

முகேஷ் அம்பானி முதல் இடம்

அந்த வகையில் விளையாட்டு அணி உரிமையாளராக இருக்கும் உலகின் பெரும் பணக்காரர்களை அவர்களின் சொத்து மதிப்பின் படி வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை. அதில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் முகேஷ் அம்பானி.

50 பில்லியன் டாலர்!!

50 பில்லியன் டாலர்!!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 50 பில்லியன் டாலர்களாகும். இவரது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை சுமார் 100 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியது.

மும்பை இந்தியன்ஸ் அணி

மும்பை இந்தியன்ஸ் அணி

இந்த அணி 2013, 2015, 2017 என மூன்று சீசன்களில் ஐபிஎல் கோப்பை வென்று சாதித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தவிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இடம் யார்?

இரண்டாம் இடம் யார்?

விளையாட்டு அணிகளின் பணக்கார உரிமையாளர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் முன்னாள் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் இருக்கிறார். அவர் அமெரிக்காவை சேர்ந்த என்.பி.ஏ எனப்படும் கூடைப்பந்து தொடரில் ஆடும் லாஸ் ஏஞ்சலஸ் கிளிப்பர்ஸ் என்ற அணியை வாங்கி, நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு 41.2 பில்லியன் ஆகும்.

மூன்றாவது இடத்தில் ரெட்புல்ஸ்

மூன்றாவது இடத்தில் ரெட்புல்ஸ்

மூன்றாவது இடத்தில் பிரபல ரெட்புல்ஸ் எனர்ஜி ட்ரிங்க் உரிமையாளர் டியட்ரிச் மேட்ஷிட்ஸ் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 18.9 பில்லயன் ஆகும். இவர் ஃபார்முலா ஒன் அணியான ரெட் புல் டோரோ ரோசோ ஹோண்டா அணியின் பெரும்பான்மை உரிமையாளர் ஆவார்.

Story first published: Monday, March 18, 2019, 17:37 [IST]
Other articles published on Mar 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+