Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Paralympics: இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. வட்டு எறிதலில் வெண்கலம் வென்றார் அசத்தினார் வினோத் குமார்

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் தொடரில், இந்திய அணிக்கு 3வது பதக்கம் வென்று கொடுத்துள்ளார் வினோத் குமார்.

ஒலிம்பிக் தொடர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சகோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சார்ந்த 54 வீரர், வீராங்கனைகள் 9 வகை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

3 பதக்கம்

3 பதக்கம்

இந்த தொடரில் இன்று இந்திய அணிக்கு 2 வெள்ளி, வெண்கலம் என இன்று 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இன்று காலை நடைபெற்ற டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். இவரைத் தொடர்ந்து சற்று முன்னர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நிஷாத்

நிஷாத்

டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்த வெள்ளிப் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. நிஷாத் 2.06 மீட்டர் உயரத்தை தாண்டினார். இதன் மூலம் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. அமெரிக்காவை சேர்ந்த ரோட்ரிக் டவுன்செண்ட் தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2.15மீ உயரத்தை தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். அதே போல டல்லாஸ் வைஸ் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்தியாவுக்கு 3வது பதக்கம்

இந்தியாவுக்கு 3வது பதக்கம்

இந்நிலையில் இந்தியாவுக்கு 3வது பதக்கம் கிடைத்துள்ளது. வட்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். வட்டு எறிதல் போட்டியில் ஒவ்வொரு வீரருக்கும் மொத்தம் 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும். அதில் அதிபட்ச தூரத்தை கணக்கிட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

புள்ளிகள்

புள்ளிகள்

அந்தவகையில் வினோத் குமார் தனது முதல் வாய்ப்பில் 17.46 மீ தூரம் வீசினார். 2வது சுற்றில் சற்று முன்னேற்றம் கண்டு 18.32 மீட்டர் தூரம் வீசி அனைவருக்கும் மகிழ்ச்சி கொடுத்தார். 3வது வாய்ப்பில் மீண்டும் சறுக்கிய வினோத் 17.80 மீ தூரத்திற்கு வீசினார். இதன் பிறகு 4வது சுற்றில் 19.12 மீட்டர் தூரத்திற்கு வட்டு எறிந்தார். எனினும் புள்ளிப்பட்டியலில் கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால் 5வது வாய்ப்பில் தனது பதக்கத்தை அவர் உறுதி செய்தார். 5வது சுற்றில் 19.91மீ தூரம் வீசி அசத்தினார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Story first published: Sunday, August 29, 2021, 20:14 [IST]
Other articles published on Aug 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+