For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாராலிம்பிக்: தங்கத்திற்கு அருகில் சென்று ஏமாற்றிய ரஞ்சீத்.. கடைசி வரை விடா முயற்சி..தோற்றது எப்படி?

டோக்கியோ: பாராலிம்பிக்ஸ் தொடரில் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரஞ்சித் பாட்டி தோல்வியை தழுவியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் அதே டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சார்ந்த 54 வீரர், வீராங்கனைகள் 9 வகை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

பாராலிம்பிக் போட்டிகள்

பாராலிம்பிக் போட்டிகள்

வில்வித்தை, பேட்மிண்டன், துப்பாக்கிசுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, வலுதூக்குதல் உள்பட 9 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொண்டு விளையாடி வருகிறது. ஐந்தாவது நாளான இன்று, டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் காலிறுதிச்சுற்றில் மோதினார். அதில் வெற்றி பெற்று ஒரு பதக்கத்தையும் இந்தியாவுக்கு உறுதி செய்துள்ளார்.

மற்றொரு ஈட்டி எறிதல்

மற்றொரு ஈட்டி எறிதல்

இந்நிலையில் ஆண்கள் ஈட்டி எறிதலில் இன்று இறுதிப்போடி நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த ரஞ்சித் பாட்டி பங்கு பெற்றிருந்தார். ஆனால் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி செய்தியே காத்திந்தது. ரஞ்சீத் பாட்டி பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்றிருந்தார். ஆனால் பாராலிம்பிக்கில் அது பொய்யாகியுள்ளது.

இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஒவ்வொரு வீரருக்கும் மொத்தம் 6 வாய்ப்புகள் தரப்படும். அதில் அதிகபட்ச தூரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதன்படி மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் ஈட்டியை வீசிய ரஞ்சீத் பாட்டி, முதல் வாய்ப்பிலேயே ஃபவுலாக வீசினார். மீதமுள்ள 5 வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றாவது அதிகபட்ச தூரத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

தகர்ந்தது கனவு

தகர்ந்தது கனவு

ஆனால் தனக்கு வழங்கப்பட்ட 6 வாய்ப்புகளிலும், ஃபவுலாக ஈட்டியை வீசி ஏமாற்றம் கொடுத்தார். இதனால் ரஞ்சீத் பாட்டியின் பாராலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தது. ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவை போல், பாராலிம்பிகில் இருப்பார் எனக்கூறப்படுகிறது.

Story first published: Saturday, August 28, 2021, 18:26 [IST]
Other articles published on Aug 28, 2021
English summary
India's Ranjeet Bhati fails to register a mark in javelin final of paralympics 2020
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+