இறுதி வரை நகம் கடிக்கவைத்த ஆட்டம்.. இந்தியாவுக்கு 5வது தங்கம்.. பேட்மிண்டனில் கிருஷ்ணா நாகர் அசத்தல்

Paralympics 2020: பாரா ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் கிருஷ்ணா நாகர்.

Rohit scores first overseas Test Ton | IND vs ENG Oval Test 2021 | OneIndia Tamil

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

Paralympics: தொடக்கமே அதிரடி..பேட்மிண்டன் இறுதிச்சுற்று.. IAS அதிகாரி யாதிராஜ் வெள்ளி வென்று அசத்தல்Paralympics: தொடக்கமே அதிரடி..பேட்மிண்டன் இறுதிச்சுற்று.. IAS அதிகாரி யாதிராஜ் வெள்ளி வென்று அசத்தல்

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவுக்கு இந்தாண்டு பதக்க மழை பொழிந்து வருகிறது.

இறுதிப்போட்டி

இறுதிப்போட்டி

பாரா ஒலிம்பிக் போட்டியின் 13வது நாளான இன்று பதக்கத்துடன் தொடங்கியுள்ளது. இந்திய அணி. ஆடவர் ஒற்றையர் பிரிவு SH6 பேட்மிண்டனுக்கான இறுதிப்போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர், ஹாங்காங் வீரர் மான் காய்சூ- ஐ எதிர்கொண்டார். ரசிகர்களை நகம் கடிக்க வைக்கும் அளவிற்கு தொடக்கமே மிகவும் பரபரப்பாக இருந்தது.

தொடக்கம்

தொடக்கம்

இரு தரப்பு வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்ததால் முதல் செட்டில் 5 - 5 பின்னர் 11 - 10 என நெருக்கமாக சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் அதனை நீண்ட நேரம் நீடிக்க விடவில்லை கிருஷ்ணா நாகர். கடைசி கட்டத்தில் ஆக்ரோஷமாக விளையாடிய அவர், 21 - 17 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

சமநிலையில் ஆட்டம்

சமநிலையில் ஆட்டம்

2வது சுற்றில் மீண்டும் இரு வீரர்களும் சமபலத்துடன் மோதுக்கொண்டனர். இதனால் மீண்டும் 6 - 6 என நெருக்கமான புள்ளிகளுடன் சென்றது. ஆனால் இந்த முறை ஹாங்காங் வீரரின் பக்கம் வெற்றி வாய்ப்பு சென்றது. அவர் 16 - 21 என்ற புள்ளிக்கணக்கில் 2வது செட்டை கைப்பற்றினார். இதனால் ஆட்டம் 1 - 1 என சமநிலை அடைந்தது.

தங்கப்பதக்கம்

தங்கப்பதக்கம்

இதனையடுத்து ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கக்கூடிய 3வது செட்டில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் சுதாரித்துக்கொண்டார். தொடக்கத்திலேயே அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 21 - 17 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதனால் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாரா ஒலிம்பிக் தொடரின் பதக்கப்பட்டியலில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் இந்தியா 24 இடத்திற்கு முன்னேறியது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India's Shuttler Krishna Nagar clinches gold, Medal Tally swells to 19 in Paralympics 2020
Story first published: Sunday, September 5, 2021, 10:24 [IST]
Other articles published on Sep 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X