Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.. துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் வென்றார் சிங்ராஜ்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறும் இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Paralympics 2020: Indian Shooter Singhraj wins bronze medal in Mens P1 – 10 m Air Pistol SH1

இந்திய வீரர், வீராங்கனைகள் வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்தவகையில் இன்று மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

ஆடவர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச்-1 பிரிவின் இறுதிச்சுற்றுப் போட்டி இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் மனீஷ் நர்வால், சிங்ராஜ் அடானா ஆகியோர் பங்கேற்றனர். சிங்ராஜ் 178.1 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் சிங்ராஜ் 2வது இடத்தையும், நார்வால் 7வது இடத்தையும் பிடித்தனர். அடுத்த 3 சுற்றுகளிலும் சிங்ராஜ் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆனால் நார்வால் முதல் 5 இடங்களுக்குள் வராமல் பின் தங்கி இருந்தார்.

இறுதியில் கடைசி சுற்றில் சிங்ராஜ் 3வது இடத்தை பிடித்ததால் அவர் வெண்கலப்பதக்கத்தை வென்றார். மற்றொரு வீரரான நார்வால் வது இடத்தை பிடித்தார். இதன் மூலம் டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 28ஆவது இடத்தில் உள்ளது.

Story first published: Tuesday, August 31, 2021, 19:29 [IST]
Other articles published on Aug 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+