Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6வது தங்கத்தை வென்ற இந்தியா.. உயரம் தாண்டுதலில் சாதித்த பிரவீன் குமார்.. பதக்க பட்டியலில் மிரட்டல்!

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டி64 பிரிவில் பங்கேற்ற இவர், 2.08 மீட்டர் உயரம் தாவி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதோடு, புதிய ஆசிய சாதனையையும் படைத்துள்ளார். இதன் மூலமாக பாராலிம்பிக்ஸில் தனது 26வது பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

பாரிஸில் பாராலிம்பிக்ஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8வது நாள் முடிவில் இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் உட்பட 25 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 16வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் 9வது நாளில் ஆடவருக்கான உயரம் தாண்டுலில் டி64 பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் குதித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.

paralympics 2024 paralympics praveen kumar 2024

போலாந்து வீரர் லேபியாடோ, உஸ்பெகிஸ்தான் வீரர் கியாசோவ், அமெரிக்காவின் லோக்சிடண்ட் மற்றும் இந்தியாவின் பிரவீன் குமார் ஆகிய 4 பேரில் யாருக்கு பதக்கம் என்ற நிலை வந்தது. அப்போது 2.03 மீட்டர் உயரத்தை 4 பேரும் கடந்தனர். பின்னர் 2.06 மீட்டர் உயரத்தை யார் கடக்கிறார்கள் என்று பார்க்கப்பட்டது. அதில் லேபியாடோ மற்றும் கியாசோவ் இருவரும் தோல்வியடைந்தனர். இதனால் இருவருக்கும் வெண்கலப் பதக்கம் உறுதியானது.

இதனால் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் லோக்சிடெண்ட் மற்றும் பிரவீன் குமார் மோதினர். அப்போது 2.06 மீட்டர் உயரத்திற்கு ஆட்டம் நடந்தது. அதனை இருவருமே வெற்றிகரமாக கடக்க, தொடர்ந்து 2.08 மீட்டருக்கு பந்தயம் உயர்த்தப்பட்டது. அதனை பிரவீன் குமார் எளிதாக தாவ, அமெரிக்கா வீரர் லோக்சிடெண்ட் சொதப்பினார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் அளிக்கப்பட்டது.

இதன் மூலமாக இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கம் வென்று அசத்தினார். அதுமட்டுமல்லாமல் 2.08 மீட்டர் உயரத்திற்கு குதித்து ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார். இவர் ஏற்கனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தவர். இம்முறை அதனை தங்கப் பதக்கமாக மாற்றி அசத்தியுள்ளார். இதன் மூலமாக இந்தியா 6வது தங்கத்தை வென்று சாதித்துள்ளது.

இதனால் இந்தியா பாராலிம்பிக்ஸ் பதக்க பட்டியலில் 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கலத்துடன் 14வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் சீனா 74 தங்கம், 56 வெள்ளி மற்றும் 39 வெண்கலத்துடன் 169 பதக்கங்களுடன் முதலிடத்திலும், கிரேட் பிரிட்டன் 38 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் உட்பட 87 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது.

Story first published: Friday, September 6, 2024, 17:45 [IST]
Other articles published on Sep 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+