2024 பாராலிம்பிக் பதக்கப் பட்டியல் - ஒரே நாளில் டாப் 5இல் அமெரிக்கா.. இந்தியா எந்த இடம்?
பாரிஸ்: 2024 பாராலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை ஐந்து பதக்கங்கள் மட்டுமே வென்றிருக்கிறது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 22 ஆவது இடத்தில் உள்ளது. நேற்று வரை 16 வது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது அதிரடியாக ஐந்தாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. மூன்றாம் நாள் அன்று அமெரிக்கா நான்கு தங்கப் பதக்கங்களை வென்றதை அடுத்து பதக்க பட்டியலில் அதிரடி முன்னேற்றத்தை கண்டு இருக்கிறது.
தற்போது பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. அந்த நாடு 20 தங்கம், 15 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்று இருக்கிறது. மொத்தம் 42 பதக்கங்களை வென்றுள்ளது சீனா.

அடுத்த இடத்தில் கிரேட் பிரிட்டன் உள்ளது. அந்த நாடு 11 தங்கம், 8 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை வென்று மொத்தம் 25 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அந்த நாடு 8 தங்கம், 3 வெள்ளி மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்று உள்ளது. மொத்தம் 23 பதக்கங்கள் வென்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளன. இந்தியா இந்த பட்டியலில் 22 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது இந்தியா ஒரு தங்க பதக்கத்தை மட்டுமே வென்று இருப்பதால் பின்னடைவை சந்தித்துள்ளது. அதிக தங்கப்பதக்கங்களை வென்றால் மட்டுமே இந்தியாவால் பதக்கப் பட்டியலில் வேகமாக முன்னேற முடியும்.
இந்தியா 10 மீட்டர் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஒரு தங்கப்பதக்கத்தை வென்று இருந்தது. அதே மகளிர் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் வெவ்வேறு பிரிவுகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்று இருந்தது. மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில்வித்தை வீராங்கனை சீத்தல் தேவி பதக்கம் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தார். எனினும், நான்காம் நாளான இன்று இந்தியா சில பதக்கப் போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் அதிக பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
2024 பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற இந்தியர்கள் -
- அவனி லேகரா - துப்பாக்கி சுடுதல் - பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 - தங்கம்
- மோனா அகர்வால் - துப்பாக்கி சுடுதல் - பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 - வெண்கலம்
- ப்ரீத்தி பால் - தடகளம் - பெண்களுக்கான 100 மீட்டர் டி35 - வெண்கலம்
- மணீஷ் நர்வால் - துப்பாக்கி சுடுதல் - ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 - வெள்ளி
- ரூபினா பிரான்சிஸ் - துப்பாக்கி சுடுதல் - பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 - வெண்கலம்
Paralympics 2024 - வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்தியா சார்பில் அதிக வீரர்கள்.. சாதனை படைப்போமா?
2024 பாராலிம்பிக் தொடரில் அதிக பதக்கம் வென்ற முதல் ஐந்து நாடுகள் -
1. சீனா - 20 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கலம் - மொத்தம் 42
2. கிரேட் பிரிட்டன் - 11 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் - மொத்தம் 25
3. பிரேசில் - 8 தங்கம், 3 வெள்ளி, 12 வெண்கலம் - மொத்தம் 23
4. நெதர்லாந்து - 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் - மொத்தம் 10
5. அமெரிக்கா - 5 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் - மொத்தம் 19
22. இந்தியா - 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் - மொத்தம் 5


Click it and Unblock the Notifications