Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்கள் மீது கற்களை வீசினால் அதைப் படிக்கற்களாக்குங்கள்.. சச்சின்

டெல்லி: சச்சின் என்ற மாபெரும் சகாப்தம் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கவுள்ள நிலையில் சச்சின் கூறிய தத்துவங்களை சற்று திரும்பிப் பார்ப்போம்...

சச்சின் விளையாடும் ஒவ்வொரு நொடியும் ரசிகர்களுக்கு கோடானு கோடி சந்தோஷத்தைக் கொடுக்கும் தருணம்.

முடிந்தவரை சச்சினின் இருப்பை அனுபவித்து குதூகலித்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு சச்சினின் இந்த தத்துவங்கள் அல்லது அறிவுரைகள் நிச்சயம் சந்தோஷத்தைக் கொடுக்கும்.

தோல்வியை வெறுப்பவன் நான்

தோல்வியை வெறுப்பவன் நான்

நான் தோல்வியை வெறுப்பவன். கிரிக்கெட்தான் எனது முதல் காதல். மைதானத்திற்குள் நான் நுழைந்து விட்டால், அது வேறு ஒரு உலகமாக மாறி விடும். வெற்றி பெற வேண்டும் என்ற பசி என்னுள் அடங்காமல் இருந்து கொண்டே இருக்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்துவது ஸ்பெஷல்...

பாகிஸ்தானை வீழ்த்துவது ஸ்பெஷல்...

எப்போதுமே பாகிஸ்தானை வெற்றி கொள்வது என்பது விசேஷமானதுதான். அவர்கள் கடினமான அணியினர். அவர்களுக்கு எதிராக நம்முடன் வரலாறு இருப்பது ஆறுதலான விஷயம்.

ரன்னர் எனக்குத் தேவையில்லை

ரன்னர் எனக்குத் தேவையில்லை

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எனக்கு ஒருபோதும் ரன்னர் தேவைப்பட்டதில்லை. பள்ளியில் கூட அப்படித்தான். எனக்குத்தான் பந்து எப்படி வருகிறது, எவ்வளவு கடினமாக இருக்கிறது, எப்போது அடிக்க வேண்டும் என்று கணிக்க முடியும்.

என் மனைத என்னாலேயே படிக்க முடியாது

என் மனைத என்னாலேயே படிக்க முடியாது

என் மனதை என்னாலேயே கூட சில நேரங்களில் கணிக்க முடியாது. என் மனதில் என்ன ஓடுகிறது என்பது எனக்கே கூட சில நேரங்களில் புரியாது. அப்படி இருக்கையில், மற்றவர்கள் எப்படி என்னை புரிந்து கொள்ள முடியும்....

போகஸ் பண்ணுங்க

போகஸ் பண்ணுங்க

எந்த ஒரு விளையாட்டு வீரரும் தான் விளையாடும் விளையாட்டில் கவனமாக இருக்க வேண்டும். மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். சரியான மன நிலையில் இருக்க வேண்டும்.

சக்தியை திசை திருப்பாதீர்கள்

சக்தியை திசை திருப்பாதீர்கள்

ஒருபோதும் உங்களது சக்தியை திசை திருப்பாதீர்கள். அது உங்களது வெற்றியை மாற்றி விடும்.

கிரிக்கெட்தான் முதலில்

கிரிக்கெட்தான் முதலில்

மைதானத்திற்குள் இறங்கி விட்டால் என் கண் முன்பு கிரிக்கெட் மட்டுமே தெரியும். மற்ற விஷயங்களெல்லாம் பின்னால்தான்...

கற்களை வீசினால்.

கற்களை வீசினால்.

வெற்றி என்பது படிப்படியாகத்தான் வரும். பயணத்தின்போது சிலர் நம் மீது கற்களை வீசலாம். அவற்றை நீங்கள் மைல் கற்களாகவும், வெற்றிப் படிக்கட்டுக்களாகவும் மாற்றி விடுங்கள்...

0.5 விநாடி போதும்..

0.5 விநாடி போதும்..

ஒரு பந்தை கணிக்க எனக்கு 0.5 விநாடி போதுமானது. அதற்கும் குறைவாகக் கூட சில நேரங்களில் கணித்து விடுவேன்.

யார் என்ன கூறினாலும் கவலையில்லை

யார் என்ன கூறினாலும் கவலையில்லை

என்னைப் பற்றி யார் என்ன கூறினாலும் நான் கவலைப்படுவதில்லை. என் மனம் சொல்வதைத்தான் நான் கேட்பேன். என்ன செயய் வேண்டும் என்பது என் மனதுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்ப மனதை பக்குவப்படுத்தியுள்ளேன்.

Story first published: Friday, November 15, 2013, 8:51 [IST]
Other articles published on Nov 15, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+