Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்.. மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் அசத்தல்.. குவியும் பாராட்டு!

ஹங்கேரி: இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றுகொடுத்து அசத்தியுள்ளார் மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக்

டோக்கியோ ஒலிம்பிக் சிறப்பாக நடைபெற்று வரும் அதே வேளையில், ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் உலக (ஜூனியர் லெவல்) மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

இந்த தொடருக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்ற சூழலில், இந்தியாவின் பிரியா மாலிக் 73 கிலோ பிரிவில் களமிறங்கினார். இவரை எதிர்த்து பெலாரஸ் நாட்டின் க்சேனியா படபோவிச் போட்டியிட்டார். தொடக்கம் முதலே ஆவேசமாக செயல்பட்ட மாலிக் ஆட்டத்தின் அடுத்தடுத்து புள்ளிகளை தன்பக்கம் சேர்த்து முன்னிலை பெற்றார்.

தங்கப்பதக்கம்

தங்கப்பதக்கம்

பிரியா மாலிக் ஆட்டம் முழுவதுமே மிகவும் சாதூர்யமாக செயல்பட்டதால் பெலாரஸ் நாட்டு வீராங்கனையால், அவரை வீழ்த்தி ஒரு புள்ளிகளை கூட பெறமுடியவில்லை. இதனால் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற கணக்கில் பிரியா வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை ஏந்தினார்.

உற்சாகத்தில் ரசிகர்கள்

உற்சாகத்தில் ரசிகர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம் கூட கிடைக்காமல் வருத்தத்தில் உள்ள ரசிகர்களுக்கு மற்றொரு சிறப்புமிக்க தொடரில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பாராட்டு மழை

பாராட்டு மழை

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மேற்குவங்க முதல்வர் மமதா பேனர்ஜி, தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ள பிரியா மாலிக்கை நினைத்து பெருமை படுவதாக குறிபிட்டுள்ளார். இதே போல பாலிவுட் நட்சத்திரங்களான கரீனா கபூர், அபிஷேக் பச்சன், சன்னி டியோல், ஏக்தா கபூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Sunday, July 25, 2021, 17:06 [IST]
Other articles published on Jul 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+