சிந்துவை வாழ்த்திய தலைவர் ‘தங்க’த் தமிழனை மட்டும் மறந்து விடுவாரா என்ன..?
சென்னை: ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கும், வெண்கலம் வென்ற வருணுக்கும் நடிகர் ரஜினி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் மாற்றுத் திறனாளிகளுக்காக பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. இதேபிரிவில் வெண்கலம் வென்றுள்ளார் மற்றொரு இந்திய வீரரான வருண்.

பாராட்டு...
பதக்கம் வென்ற இந்த இருவீரர்களுக்கும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. அரசியல் தலைவர்களும் அவர்களைப் பாராட்டி வருகின்றனர்.
ரஜினி வாழ்த்து...
இந்நிலையில் நடிகர் ரஜினியும் தனது டிவிட்டர் பக்கத்தில் மாரியப்பனையும், வருணையும் பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘பதக்கம் வென்ற உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
சிந்துவின் ரசிகராக..
முன்னதாக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கும் டிவிட்டர் வாயிலாக ரஜினி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அப்போது அவர், "தான் சிந்துவின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டதாக" கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டரில் வாழ்த்து...
நல்ல திரைப்படங்களை மற்றும் இது போன்ற சாதனையாளர்களை மறக்காமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துவதை ரஜினி வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications