வில்வித்தையில் தென் கொரியா உலக சாதனை... தரநிலையில் 5-வது இடம் பிடித்தார் இந்தியாவின் அடானு தாஸ்
ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஆடவர் தனிநபர் வில்வித்தையில் இந்திய வீரர் அடானு தாஸ் தரநிலையில் 5-வது இடத்தை பிடித்தார். தென் கொரியாவின் கிம் வூ ஜின் உலக சாதனை படைத்தார்.
ரியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை தனிநபர் பிரிவு தரநிலை சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அடானு தாஸ் 5வது இடம் பிடித்ததுடன் 32 வீரர்கள் அடங்கிய சுற்றில் போட்டியிட தகுதி பெற்றார்.

முதல் சுற்றில் அபாரமாக செயல்பட்ட அதானு தாஸ் 58 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்திருந்தார். அடுத்த சுற்றில் , சச்று தடுமாறிய அதானு தாஸ் ஒட்டுமொத்தமாக 111 புள்ளிகளுடன் 24-வது இடத்திற்கு பின்தங்கினார். பின்னர் அடுத்து வந்த சுற்றுகளில் அபாரமாக செயல்பட்டு புள்ளிகளை குவித்த அவர் 683 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்து அசத்தினார்.
இந்த சுற்றில் பங்கேற்ற தென் கொரியாவின் கிம் வூ ஜின் 720-க்கு 700 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை மற்றும் ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
இது குறித்து உலக சாதனை படைத்த கிம் பூ ஜின் கூறியதாவது: இது தரநிலை சுற்றுதான் என்பதால், பெரிய மகிழ்ச்சி ஒன்றும் இல்லை. உலக சாதனை முக்கியமானது என்றபோதிலும், பின்வரும் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications