Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குண்டு எறிதலில் 3 பதக்கங்களையும் அள்ளிய இந்தியா.. ஆசிய பாரா விளையாட்டில் சச்சின் கிலாரி புதிய சாதனை

நகோயா: ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்திய தடகள வீரர்கள் புதிய வரலாறு படைத்துள்ளனர். ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என 3 பதக்கங்களையும் இந்திய வீரர்களே முழுமையாக அள்ளி மைதானத்தை அதிர வைத்துள்ளனர்.

ஆண்களுக்கான குண்டு எறிதல் எப்46 பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே முழு ஆதிக்கம் செலுத்தினர். பாராலிம்பிக் பதக்க நாயகனான இந்தியாவின் சச்சின் கிலாரி முழு பலத்துடன் செயல்பட்டார். தனது கடைசி முயற்சியில் குண்டை 15.87 மீட்டர் தூரம் வீசி புதிய போட்டி சாதனையை படைத்தார். இந்த இமாலய தூரத்தின் மூலம் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

Sachin Khilari Breaks Record to Win Shot Put Gold as India Sweeps All Three Medals at Asian Para Games

இவரைத் தொடர்ந்து களத்தில் அனல் பறக்க செயல்பட்ட மற்றொரு இந்திய வீரரான முகமது யாசிர், 15.06 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். அதேபோல் இந்திய வீரர் பர்வீன் 14.94 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். இதன் மூலம் முதல் 3 இடங்களையும் இந்திய வீரர்களே பிடித்து தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்றனர். நடப்பு ஆசிய பாரா தொடரில் இந்தியா நிகழ்த்திய 2-வது முழுமையான பதக்க வேட்டை இதுவாகும்.

ஆசிய பாரா விளையாட்டு.. உயரம் தாண்டுதலில் தங்கம், வெள்ளியை அள்ளிக்குவித்த பிரவீன் குமார், பண்டி!

ஆசிய பாரா விளையாட்டு.. உயரம் தாண்டுதலில் தங்கம், வெள்ளியை அள்ளிக்குவித்த பிரவீன் குமார், பண்டி!

ஓட்டப்பந்தயத்திலும் பதக்கம்

ஆண்களுக்கான 100 மீட்டர் டி37 பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் பட் ராகேஷ்பாய் களம் கண்டார். தொடக்கம் முதலே சீறிப்பாய்ந்த அவர், 11.50 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இது அவரது தனிப்பட்ட சிறந்த நேரமாகவும் பதிவானது.

இப்போட்டியில் சவுதி அரேபியாவின் அலன்காலி அலி 11.31 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தையும், சீனாவின் பூர்ணமோ சப்தோயோகோ 11.35 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Story first published: Wednesday, October 21, 2026, 9:33 [IST]
Other articles published on Oct 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+