Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய பாரா விளையாட்டு.. உயரம் தாண்டுதலில் தங்கம், வெள்ளியை அள்ளிக்குவித்த பிரவீன் குமார், பண்டி!

நகோயா: ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கமும் வெள்ளியும் வென்று ஒரே நேரத்தில் 2 பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தனர்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் பாரிஸ் பாராலிம்பிக் நாயகனான இந்திய நட்சத்திர வீரர் பிரவீன் குமார் தொடக்கம் முதலே அபாரமாகச் செயல்பட்டார். முதலில் 2.00 மீட்டர் உயரத்தை மிக எளிதாகக் கடந்தார். அடுத்ததாக பட்டையை 2.05 மீட்டராக உயர்த்திய அவர், அதையும் அநாயாசமாகத் தாண்டி அசத்தினார். இதன் மூலம் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தன்வசமாக்கினார். அடுத்த முயற்சியில் 2.07 மீட்டரைத் தாண்ட முயன்ற போது அது கைக்கூடாமல் போனது.

Asian Para Games Praveen Kumar and Pandi Win Gold and Silver in Men s High Jump at Asian Para Games

அதே நேரத்தில், பிரவீன் குமாருக்கு பலத்த போட்டியளித்த மற்றொரு இந்திய வீரரான பண்டி, 1.92 மீட்டர் உயரத்தைத் தாண்டினார். இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகும். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். ஒரே பிரிவில் முதல் 2 இடங்களையும் இந்திய வீரர்களே பிடித்து அசத்தினர். உஸ்பெகிஸ்தான் நாட்டின் டெமுர்பெக் கியாசோவ் 1.86 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகர் மாவட்டத்திலுள்ள கோவிந்த்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். பயிற்சியாளர் டாக்டர் சத்யபால் சிங் வழிகாட்டுதலில் விளையாடி வரும் இவர், சர்வதேச அரங்கில் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். கடந்த 2020 டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற இவர், 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். தொடர்ந்து 2025 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.

கண்கலங்கிய ஹர்மன்பிரீத் கவுர்.. 41 பந்தில் 91 ரன்கள் விளாசி ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் அபாரம்

கண்கலங்கிய ஹர்மன்பிரீத் கவுர்.. 41 பந்தில் 91 ரன்கள் விளாசி ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் அபாரம்

தற்போது நகோயாவிலும் தங்கம் வென்று, புதிய சாதனை படைத்துள்ள பிரவீன் குமாருக்கும், வெள்ளி வென்ற பண்டிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Story first published: Wednesday, October 21, 2026, 8:28 [IST]
Other articles published on Oct 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+