Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய விமானப்படைக்கு மேலும் சிறப்பும் வலிமையும் சேர்ந்திருக்கு... சச்சின் வாழ்த்து

மும்பை : இந்திய விமானப்படைக்கு மேலும் வலிமை கூட்டும்வகையில், 5 ரபேல் போர் விமானங்கள் நேற்று வந்துள்ளன.

இந்த போர் விமானங்கள் வருகைக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010ல் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்திய விமானப்படையில் குரூப் கேப்டனின் கெளரவ பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடற்படை போர்க்கப்பல் வரவேற்பு

கடற்படை போர்க்கப்பல் வரவேற்பு

இந்திய விமானப்படையில் மேலும் சிறப்பையும் வலிமையையும் கூட்டும்வகையில் 5 ரபேல் விமானங்கள் நேற்று வந்துள்ளன. அம்பாலா விமான தளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கிய இந்த விமானங்களை முன்னதாக அரபிக்கடலில் கடற்படை போர்க்கப்பல் வரவேற்றது. இதன்மூலம் இந்திய விமானப்படையின் சக்தி மற்ற நாடுகளை விட அதிவேகமாக மாறியுள்ளது.

இந்திய விமானப்படை டிவீட்

இந்திய விமானப்படை டிவீட்

இந்த விமானங்கள் தரையிறங்கியதையொட்டி இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் டிவிட்டர் பக்கத்திலும் இதுகுறித்து டிவீட் செய்யப்பட்டது. மேலும் விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர். சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய விமானப்படையின் டிவீட்டை ஷேர் செய்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

விமானப்படைக்கு மேலும் வலிமை

மிகசிறந்த ரபேல் விமானங்களை இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள சச்சின், வான்வெளியில் நம்முடைய நாட்டை சோர்வின்றி தொடர்ந்து பாதுகாத்துவரும் இந்திய விமானப்படைக்கு மேலும் சிறப்பும் வலிமையும் சேர்ந்துள்ளது என்றுதனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

தேசத்திற்கு ரெய்னா வாழ்த்து

தேசத்திற்கு ரெய்னா வாழ்த்து

சச்சினுக்கு கடந்த 2010ல் இந்திய விமானப்படையில் குரூப் கேப்டனின் கௌரவ பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் உள்ளிட்டவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்த ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்ந்தது சிறப்பானது என்று கூறியுள்ள சுரேஷ் ரெய்னா, தேசத்திற்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, July 31, 2020, 11:28 [IST]
Other articles published on Jul 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+