எந்த அறிகுறியும் இல்ல... எப்படி வந்துச்சுன்னு தெரியல... சரிதா தேவிக்கு கொரோனா பாதிப்பு
டெல்லி : முன்னாள் உலக சாம்பியன் பாக்சர் சரிதா தேவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எந்தவிதமான முன் அறிகுறியும் தோன்றவில்லை என்று அவருடைய கணவர் தோய்பா சிங் தெரிவித்துள்ளார்.

தோய்பா சிங்கிற்கும் கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய மகனுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.
முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருடைய கணவர் தோய்பா சிங்கிற்கும் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ள நிலையில், அவர்களின் மகன் தோம்தின்னுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றவர் சரிதா தேவி. ஆசிய சாம்பியன்ஷிப்பில் 5 முறை தங்கம் வென்றவர். காமன்வெல்த் போட்டிகளிலும் வெள்ளிப்பதக்கம் வென்றவர். இந்நிலையில் இவருக்கும் இவரது கணவர் தோய்பா சிங்கிற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆனால் முன்னதாக எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தோய்பா கூறியுள்ளார்.
இந்நிலையில் இது மிகவும் கடுமையான நேரம் என்று குறிப்பிட்டுள்ள தோய்பா, இதிலிருந்து விரைவில் மீண்டு வருவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications