ஜப்பானுக்கும், கிரீஸூக்கும் வாய்ப்பு நீடிப்பு – டிராவில் முடிந்ததால்
சாவ் பாவ்லோ: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் மற்றும் கிரீஸ் அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் "சி" லீக் ஆட்டத்தில் கிரீஸ் மற்றும் ஜப்பான் அணிகள் விளையாடின. ஆரம்பம் முதல் பரபரப்பாக விளையாடிய இரு அணிகளும் தங்களது முதல் கோலை பதிவு செய்ய அதீத அக்கறை காட்டி போராடி விளையாடின.
ஆனால், ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடாததால் இந்த ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் போட்டியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகள் நீடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Story first published: Friday, June 20, 2014, 11:03 [IST]
Other articles published on Jun 20, 2014


Click it and Unblock the Notifications