Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2-வது தங்கம் வென்ற வில்வித்தை வீராங்கனை சீத்தல் தேவி.. ஆசிய பாரா போட்டியில் புதிய வரலாறு

நகோயா: ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் இளம் வில்வித்தை வீராங்கனை சீத்தல் தேவி தனது 2-வது தங்கப் பதக்கத்தை வென்று பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில், சிங்கப்பூரின் அலிம் நூர் சியாஹிதாவை 142-139 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

உச்சக்கட்ட பரபரப்புடன் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் ஆரம்பத்தில் சீத்தல் தேவிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. 2-வது சுற்றில் 26 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால், 55-59 என்ற கணக்கில் அவர் சிங்கப்பூர் வீராங்கனையை விட 4 புள்ளிகள் பின்தங்கித் தவித்தார். ஆனால் இக்கட்டான அந்த நேரத்தில் துளியும் பதற்றமடையாத சீத்தல், அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு சுற்றுகளிலும் 30-க்கு 30 புள்ளிகளை முழுமையாகக் குவித்து மீண்டு வந்தார். இதனால் ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறி 142-139 என்ற கணக்கில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தார்.

Sheetal Devi Wins Second Gold Medal in Archery at the Asian Para Games

இந்த வரலாற்று வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய பாரா தொடரில் சீத்தல் தேவி தனது 3-வது பதக்கத்தைக் கைப்பற்றி முத்திரை பதித்துள்ளார். முன்னதாக கலப்பு இரட்டையர் பிரிவில் தோமன் குமாருடன் கைகோர்த்து 151-148 என்ற கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி முதல் தங்கத்தை வென்றிருந்தார். மேலும் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இதன் மூலம் 2 தங்கம், 1 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை அள்ளி, கடந்த 2023 ஹாங்சோ ஆசிய பாரா போட்டியில் படைத்த தனது சாதனையை மீண்டும் சமன் செய்துள்ளார்.

தங்கம் வென்ற சீத்தல் தேவி, தோமன் குமார் கூட்டணி.. ஆசிய பாரா வில்வித்தையில் இந்தோனேசியாவை வீழ்த்தினர்

தங்கம் வென்ற சீத்தல் தேவி, தோமன் குமார் கூட்டணி.. ஆசிய பாரா வில்வித்தையில் இந்தோனேசியாவை வீழ்த்தினர்

முன்னதாக தரவரிசைச் சுற்றிலேயே 149 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனை படைத்த சீத்தல் தேவி, இறுதிப் போட்டியிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இரு கைகளும் இல்லாத போதிலும் கால்களையும் முகத்தையும் பயன்படுத்தி வில்வித்தையில் சர்வதேச அளவில் மிரள வைக்கும் இந்த 19 வயது காஷ்மீர் வீராங்கனை, இந்திய நாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

Story first published: Thursday, October 22, 2026, 12:49 [IST]
Other articles published on Oct 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+