Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி.. தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் அசத்தல்!

நகனோ: ஜப்பானின் நகனோ நகரில் லஜ் எனும் ஆசிய பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் சிவ கேசவன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஜப்பானின் நகனோ நகரில் ஆசிய பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் தொடங்கின. இதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

Shiva Keshavan wins gold at Asian Luge Championships in Japan

கடல் அலையில் சறுக்கி செல்லும் சர்ஃபிங் விளையாட்டை போன்று பனியில் சறுக்கி செல்லும் இந்த 'லஜ்' விளையாட்டு பெரும்பாலான குளிர்பிரதேசங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டிக்காகவே குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதில் இந்திய வீரர் சிவ கேசவன் (ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்) மணிக்கு 134.3 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆசிய லஜ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிவ கேசவன் பெறும் மூன்றாவது பதக்கம் இதுவாகும்.

ஏற்கனவே குளிர்கால ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்துள்ளார்.இதுவரை 5 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் சிவ சேவன் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கும் இவர் சொந்தகாரர் ஆவர்.தற்போதைய ஆசிய பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் மணிக்கு 134.3 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று சிவ கேசவன் முதலிடம் பிடித்துள்ளார்.

இதன்மூலம் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் 131.9 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று தங்கப் பதக்கம் வென்ற தனது சாதனையை அவர் முறியடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் 49.590 விநாடிகளில் போட்டித்தூரத்தைக் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 23, 2016, 12:33 [IST]
Other articles published on Dec 23, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+