For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் பட்டையை கிளப்பிய சச்சின்

By Siva
Sachin
மும்பை: சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கில் மட்டுமல்ல பவுலிங்கிலும் பட்டையை கிளப்பியுள்ளார்.

1989ம் ஆண்டு முதல் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் இன்று தனது ஓய்வை அறிவித்துள்ளார். சச்சின் பிட்சில் இருந்தால் பேட்டிங்கில் பிச்சு உதறுவார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் சச்சின் சர்வதேச ஒரு நாள் போட்டியில் பவுலிங்கிலும் தூள் கிளப்பியுள்ளார்.

கடந்த 1993ம் ஆண்டு ஹீரோ கோப்பை போட்டியின் அரை இறுதியில் முகமது அசாருத்தீன் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 195 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா சூப்பராக விளையாடியது. இறுதி ஓவரில் தென் ஆப்பிரிக்கா 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அப்போது அசாருத்தீன் 20 வயதே ஆன சச்சின் மீது நம்பிக்கை வைத்து அவரை பந்து வீசுமாறு கூறினார். இளம் சச்சினும் நம்பிக்கையுடன் பந்து வீசி அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதையடுத்து இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சச்சின் பந்து வீசியது தென் ஆப்பிரிக்காவின் சிறந்த வீரரான பிரையன் மாக்மிலனுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 23, 2012, 17:30 [IST]
Other articles published on Dec 23, 2012
English summary
Sachin Tendulkar who is known for his performances with the bat proved his worth with the ball as well. India won against South Africa in the 1993 Hero cup semi finals because of Sachin's magic with the ball in the final over.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X